Tamil Nadu News Updates: டெல்டா பாசன மாவட்டங்களில் இன்று முதல் 2 நாட்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம். முதல்கட்டமாக இன்று புதுக்கோட்டையில் வடிகால்கள் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்கிறார்.
மதுரையில் தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்தம்
மதுரை மாநகராட்சியில் தூய்மை மற்றும் பொறியியல் பிரிவை சேர்ந்த 6 ஆயிரம் பேர் இன்று முதல் வேலைநிறுத்தம். தொழிலாளர் நலத்துறை, மாநகராட்சி சிறப்புக் குழு, மேயர் என 3 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
செங்கல்பட்டில் பேருந்து கவிழ்ந்து விபத்து – ஒருவர் பலி
செங்கல்பட்டில் மதுராந்தகம் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து. கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு. 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பெட்ரோல், டீசல் அப்டேட்
சென்னையில் 8வது நாளாக பெட்ரோல் – டீசல் விலையில் மாற்றமில்லை . பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ94.24க்கும் விற்பனையாகிறது.
8 விருதுகளை வென்ற ஜாஸ் பட்லர்
15வது ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றது குஜராத் டைட்டன்ஸ். இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 15வது ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் வீரர் ஜாஸ் பட்லர் 8 விருதுகளை வென்றார்.
தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி திட்டத்திற்கு மாணவர்கள் இன்று குலுக்கல் முறையில் தேர்வு. இத்திட்டத்திற்கு 1.42 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் செய்த நிலையில், சுமார் 1 லட்சம் இடங்களுக்கு குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யவுள்ளனர்.
கட்சியில் இணைந்தபோது மாநிலங்களவை வாய்ப்பு தரப்படும் என சோனியா காந்தி உறுதியளித்திருந்தார். கட்சியில் இணைந்து 18 ஆண்டுகளாகியும் தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மாநிலங்களவை வாய்ப்புக்கு எனக்கு தகுதி இல்லையா என மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் நக்மா கேள்வி
கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட மதுரை – ராமேஸ்வரம் பயணிகள் ரயில் இன்று முதல் மீண்டும் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு
தமிழ்நாட்டில் இருந்து ராஜ்யசபாவுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக இன்று மதியம் 12 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்கிறேன். காங்கிரஸ் தலைவர், காங்கிரஸ் தலைமை, உறுப்பினர்கள், நண்பர்களின் ஆதரவு மற்றும் வாழ்த்துக்கு நன்றி என ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.