Telegram: உலகின் பிரபல செய்தி பகிரும் தளங்களில் ஒன்றாக டெலிகிராம் இருந்து வருகிறது. கோடிக்கணக்கிலான பயனர்கள் இந்த செயலியை நித்தம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில், டெலிகிராம் நிறுவனம் புதிய பிரீமியம் அம்சத்தை சோதனை செய்துவருகிறது.
டெலிகிராம் சமீபத்தில் விளம்பரங்களை நிர்வகிக்கும் பகுதியை உருவாக்கியது. அதனடிப்படையில், தற்போது நிறுவனம் புதிய பிரீமியம் சேவையை அறிமுகம் செய்யப்போவதாக தகவல் கிடைத்துள்ளது.
புதிய பிரீமியம் சேவை அறிமுகமானால் பயனர்கள் சேவைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். பயப்பட வேண்டாம்; அனைவரும் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.
Reliance Jio: யாரும் தொடாத உச்சத்தை தொட்ட ஜியோ; இனி யாராலயும் அசைக்க முடியாது!
டெலிகிராம் பிரீமியம்
யாருக்கேனும் விளம்பரங்கள் மீது அதிக வெறுப்பு இருந்தால், அவர்கள் மாத சந்தாவை செலுத்தி, விளம்பரங்களற்ற சேவையை அனுபவிக்க முடியும். இருப்பினும், பிரீமியம் சந்தாதாரர்களுக்கு கூடுதல் அம்சங்கள் வழங்கப்படும் என கசிந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
DigiLocker: அரசின் டிஜிலாக்கர் இப்போது வாட்ஸ்அப் செயலியில்!
மேலும், பிரீமியம் பயனர்களுக்கு தனி எமோஜிகளும், ஸ்டிக்கர்களும் கிடைக்கும். இது குறித்து பீட்டா டெஸ்டிங் பயனர் ஒருவர் தனது டெலிகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
தற்போது, இந்த பிரீமியம் அம்சங்கள் சோதனைகளில் மட்டுமே கிடைக்கின்றன. மேலும் விலை நிர்ணயம் மற்றும் பயனர்களுக்கு பதிவு வரைமுறை ஏதும் உள்ளதா என்பது குறித்த கூடுதல் தகவல்களை நிறுவனம் இன்னும் வெளியிடப்படவில்லை.
Elon Musk: எலான் மஸ்க் போட்ட ஒரு பதிவில் ஆடிப்போன ட்விட்டர்!
டெலிகிராம் பிரீமியம் சந்தா
பீட்டாவில் டெலிகிராம் பிரீமியத்தின் தோற்றம், செய்தியிடல் பயன்பாட்டின் கட்டணச் சந்தா ஆகியவை நெருக்கமாக இருப்பதைக் குறிக்கிறது. எனினும், இது குறித்து டெலிகிராம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
டெலிகிராம் அப்டேட்
சமீபத்தில் வெளியான புதிய அப்டேட்டில், தனிப்பட்ட அரட்டைகள் அல்லது முழு அரட்டைகளுக்கு இப்போது தனி டோன்களை செட் செய்யும்படி வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் வழியாக ஒலியை வைத்தே அறிந்து கொள்ள முடியும்.
குறிப்பிட்ட தொடர்புகளுக்கு ஆட்டோ டெலிட் அம்சத்தினை செயல்படுத்த தற்போது செயல்படுத்த முடியும். தற்போது கொடுக்கப்பட்டிருக்கும் அப்டேட்டில் இந்த அம்சம் பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்
டெலிகிராம் பிரீமியம் குறித்து உங்கள் எண்ணங்கள் என்ன? உங்கள் பணத்தை இதற்காக செலவிடுவீர்களா அல்லது இலவச பதிப்பில் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்களா? கருத்துகளை எங்களுடன் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
டெலிகிராம் பிரீமியம் குறித்து உங்கள் எண்ணங்கள் என்ன? உங்கள் பணத்தை இதற்காக செலவிடுவீர்களா அல்லது இலவச பதிப்பில் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்களா? கருத்துகளை எங்களுடன் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் பகிர்ந்து கொள்ளுங்கள்.