அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து, கனடாவில் கை துப்பாக்கிக்கள் வைதிருப்பதற்கு எதிராக மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கனடா அதிபர் ஜஸ்டின் டியூடெர்ட் செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது, “ கைத்துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமையில் தேசிய முடக்கத்தை அமல்படுத்துவதற்கான சட்டத்தை நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம். இது தொடர்பாக மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் பொருள் என்னவென்றால், இனி கனடாவில் எங்கும் கைத்துப்பாக்கிகளை வாங்கவோ, விற்கவோ, மாற்றவோ அல்லது இறக்குமதி செய்யவோ முடியாது. கைதுப்பாக்கி களுக்கான சந்தையை நாங்கள் கட்டுபடுத்துகிறோம்” என்றார்.
அண்மையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 19 சிறுவர்கள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட 18 வயதான இளைஞர் போலீஸாரால் கொல்லப்பட்டார். பள்ளிச் சிறுவர்களை பாதுகாக்கப் போராடிய இரண்டு ஆசிரியர்களும் இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் துப்பாக்கிச் சூடு நடந்த, ராப் தொடக்கப்பள்ளியில் அமெரிக்க அதிபர் பைடன் நேற்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
தொடர் துப்பாக்கிச் சூடு சம்பவங்களை தொடர்ந்து அமெரிக்காவில் ஆயுதங்கள் வைத்திருப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றது.
இந்த நிலையில் கனடாவில் கை துப்பாக்கிகளுக்கு தடைவிதித்து மசோதா அமல்படுத்தப்பட்டுள்ளது. கனடா அரசின் இந்த முடிவை சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.