வரும் ஜூன் 17ஆம் தேதி சித்து மூஸ் வாலா தனது 29வது பிறந்தநாளை பிறந்தநாளை கொண்டாடவிருந்த நிலையில் சுட்டுக் கொல்லபட்டிருப்பது அவரது டும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தின் பிரபல பாடகரும் காங்கிரஸ் கட்சி பிரமுகருமான சித்து மூஸ் வாலா (28), கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காரில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். பஞ்சாப் மாநிலத்தில் முக்கிய பிரமுகர்களுக்கு காவல்துறை தரப்பில் அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு குறைக்கப்பட்டு வருகிறது. இதனால், சித்து மூஸ் வாலாவுக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பும் குறைக்கப்பட்டது. பாதுகாப்பு குறைக்கப்பட்ட 24 மணி நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளதால் அவரது ரசிகர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.
இந்நிலையில், கொல்லப்பட்ட சித்து மூஸ் வாலாவுக்கு வரும் நவம்பர் மாதத்தில் திருமணம் நடத்த திட்டமிட்டிருந்ததாக அவரது குடும்பத்தினர் சோகத்துடன் தெரிவித்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் நடந்த பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் சித்து மூஸ் வாலா போட்டியிட்டு தோல்வியடைந்தார். தேர்தலுக்கு முன்பாக சித்து மூஸ் வாலாவின் தாயார் சரண் கவுர் கூறுகையில், தேர்தல் முடிந்தபின் சித்து திருமணம் செய்து கொள்வார் என்றும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார். பஞ்சாபில் உள்ள சங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை சித்துவுக்கு திருமணம் செய்துவைக்க திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் வரும் ஜூன் 17ஆம் தேதி சித்து மூஸ் வாலா தனது 29வது பிறந்தநாளை பிறந்தநாளை கொண்டாடவிருந்த நிலையில் உயிரிழந்திருப்பது அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்கலாம்: சர்ச்சை பாடல்கள், அரசியல் தோல்வி, துப்பாக்கி கலாசாரம் – யார் இந்த சித்து மூஸ்வாலா?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM