அறிவித்த தேதிக்கு முன்பே வெளியாகும் விராட பர்வம்
ராணா டகுபதி மற்றும் சாய் பல்லவி இணைந்து நடித்துள்ள படம் 'விராட பர்வம்'. 1990-களின் உண்மைச் சம்பவங்களின் அடைப்படையில் இந்தப் படம் உருவாகி வருகிறது. முக்கியக் கதாபாத்திரங்களில் ஈஸ்வரி ராவ், பிரியாமணி, நவீன் சந்திரா, நந்திதா தாஸ், ஜரீனா வஹாப், சாய் சந்த் ஆகியோர் நடித்துள்ளனர். சுரேஷ் பொப்பிலிஇசையமைக்கிறார். இந்தப் படத்தின் ரிலீஸ் கொரோனா காரணமாக இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. சமீபத்தில் ஜூலை 1ம் தேதி இந்தப் படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அறிவித்த தேதிக்கு முன்பாகவே வெளியாக இருக்கிறது. வருகின்ற ஜூன் மாதம் 17 தேதி விரதபர்வம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நக்சலைட் தொடர்பான கதையில் இந்த படம் உருவாகி உள்ளது.