மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்களை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம், சாலையில் வளைந்த போது அதன் பின்பகுதி உடைந்து விழுந்ததில் அதில் பயணித்தவர்கள் காயமடைந்தனர்.
அம்மாநிலத்தின் நாசிக் அருகே, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சரக்கு வாகனத்தில், சிறுவர்கள், முதியவர்கள் என 10க்கும் மேற்பட்டோர் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த வாகனம் வேகமாக வளைந்தபோது, அதன் பின்பகுதி உடைந்து கவிழ்ந்ததில் அதில் இருந்தவர்கள் சாலையில் விழுந்து காயமடைந்தனர்.