லக்னோ: டெல்லியில் இருந்து ஆம்புலன்ஸ் ஒன்று இன்று காலை உத்தரபிரதேசம் நோக்கி சென்றுகொண்டிருந்தது. உத்தரபிரதேசத்தின் ஃபடிகஞ்ச் பாஷிம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் தடுப்புகள் மீது மோதி சாலையின் மறுபக்கத்திற்கு சென்றது. அப்போது, அந்த சாலையில் சென்றுகொண்டிருந்த லாரி மீது வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஆம்புலன்ஸ் டிரைவர் தூங்கியதால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த நான்கு ஆண்களும், மூன்று பெண்களும் பிலிபிட் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.