மும்பை,
மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டம், காரவலி கிராமத்தில் உள்ள 30 வயதான பெண் ஒருவர் அங்குள்ள கிணற்றுக்குள் தனது 6 குழந்தைகளை அடுத்தடுத்து வீசி எறிந்துள்ளார்.
அலறியபடி தண்ணீருக்குள் விழுந்த அவர்கள் மூழ்கிய நிலையில், இதுகுறித்து அறிந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
உடனடியாக விரைந்து சென்ற போலீசார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கிணற்றுக்குள் கிடந்த குழந்தைகளை மீட்டனர்.ஆனால் அவர்கள் அனைவரும் உயிரிழந்தனர்.நீரில் மூழ்கியவர்களில் 18 மாதமே ஆன பச்சிளம் குழந்தை உள்பட 10 வயதுக்கு உட்பட்ட ஐந்து பெண் குழந்தைகளும் அடங்கும்.
அந்த பெண்ணை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பெண் கூறியதாவது,
குடும்ப தகராறின்போது அந்த பெண்ணை அவரது கணவர் வீட்டை சேர்ந்தவர்கள் தாக்கியதாகவும்,இதனால் வெறுப்படைந்த அவர், பெற்ற குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.