இலங்கை கடற்படையின் தலைமன்னார் தம்மென்ன கடற்படை முகாம், கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் தங்க நகைகளுடன் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமத்திய கடற்படை தலைமையகத்திற்கு கிடைத்த தகவலின் படி, தலைமன்னார் இருந்து 1.2 கடல் மைல் தொலைவில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
43 மில்லியனுக்கும் அதிகமான பெறுமதியுள்ள இந்த தங்க நகைகள் இலங்கை சுங்கத்தின் காங்கேசன்துறை உபதடுப்பு அலுவலகத்தினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
1.912 கிலோ எடை கொண்ட இந்த தங்கத்தின் மதிப்பு ரூ. 43,208,000 .
இலங்கை சுங்கப் பிரிவினர் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் போது குறித்த தங்கம் தொகை இந்தியாவிற்கு கடத்தப்பட இருந்தது பற்றி தெரியவந்துள்ளது.