இளம் பெண்ணை கொன்று சூட்கேசில் ஆற்றில் வீசிய வழக்கு: பிரித்தானியருக்கு 8 ஆண்டுகள் கழித்து சிறை

தாய்லந்தில் பாலியல் தொழிலாளியை கொன்ற வழக்கில் பிரித்தானியர் ஒருவருக்கு கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் கழித்து சிறை தணடனை விதிக்கப்பட்டுள்ளது.

2014-ஆம் ஆண்டு பெண் ஒருவரைக் கொன்று, துண்டாக்கப்பட்ட அவரது உடலை ஒரு சூட்கேஸில் ஆற்றில் வீசப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் பிரித்தானியாவைச் சேர்ந்த ஒருவருக்கு தாய்லாந்து நீதிமன்றம் இன்று தண்டனை வழங்கியது.

27 வயதான பாலியல் தொழிலாளியான லக்ஷமி மனோசத்தை (Laxami Manochat) ஹோட்டல் அறையில் கொன்று அவரது உடலை அப்புறப்படுத்தியதற்காக 51 வயதான ஷேன் கென்னத் லுக்கருக்கு (Shane Kenneth Looker) 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: இறந்து பிறந்த குழந்தையை பிரிட்ஜில் வைத்த பெண்! லண்டனில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவம் 

இளம் பெண்ணை கொன்று சூட்கேசில் ஆற்றில் வீசிய வழக்கு: பிரித்தானியருக்கு 8 ஆண்டுகள் கழித்து சிறை

பொலிஸாரின் தகவல்களின்படி, நவம்பர் 1, 2014 அன்று பாங்காக் கோ-கோ பட்டியில் இருந்து இருவரும் ஒன்றாக ஹோட்டலுக்குள் நுழைந்துள்ளனர். அப்போது இருவரும் சேர்ந்து ஒரு புகைப்படத்தையும் எடுத்துள்ளனர்.

ஆனால், அந்த ஹோட்டல் வளாகத்தை விட்டு வெளியேறும்போது லூக்கர் மட்டுமே வந்துள்ளார்.

அப்போது ஹோட்டல் ஊழியர்கள் இரண்டுபேர் சென்று மிகவும் கனமாக இருந்ததாக கூறப்படும் அவரது சூட்கேஸை ஏசிடுத்து வந்துள்ளனர். அவர் சென்ற பிறகு ஹோட்டல் கிளீனர் அறையின் பெட்ஷீட்கள் இரத்தக் கறையுடன் இருந்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இளம் பெண்ணை கொன்று சூட்கேசில் ஆற்றில் வீசிய வழக்கு: பிரித்தானியருக்கு 8 ஆண்டுகள் கழித்து சிறை

லக்ஷமியின் சிதைந்த சடலம் நவம்பர் 6, 2014 அன்று ஒரு சூட்கேஸில் கற்கள் ஏற்றப்பட்டு மே க்ளோங் ஆற்றில் வீசப்பட்டது. லுக்கரின் டிஎன்ஏ ஆதாரம் பின்னர் லக்ஷமியின் நகங்களுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வழக்கில் லூக்கர் குற்றம் சாட்டப்பட்டு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார், ஆனால் அவரது ஒப்புதல் வாக்குமூலத்தின் காரணமாக, நீதிமன்றம் அவரது தண்டனையை பாதியாக எட்டு ஆண்டுகள் வரை குறைத்தது என்று தாய்லந்தின் மேற்கு நகரமான காஞ்சனபுரி நீதிமன்றத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: “நான் ஆணாக இருந்திருக்கலாம்” மாதவிடாய் வலியால் பிரெஞ்சு ஓபனிலிருந்து வெளியேறிய சீன வீராங்கனை வேதனை

இளம் பெண்ணை கொன்று சூட்கேசில் ஆற்றில் வீசிய வழக்கு: பிரித்தானியருக்கு 8 ஆண்டுகள் கழித்து சிறை

லுக்கருக்கு 10 மில்லியன் பாட் (300,000 அமெரிக்க டொலர்) மற்றும் வட்டியுடன் லக்ஷமியின் தாயாருக்கும், கொலை செய்யப்பட்ட பெண்ணின் மகளுக்கு 2 மில்லியன் பாட் () மற்றும் அதற்கான வட்டியும் சேர்த்து இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

இதையும் படிங்க: பள்ளிக்குள் புகுந்து சரமாரி துப்பாக்கிச்சூடு! ஆசிரியை பரிதாப பலி 

இளம் பெண்ணை கொன்று சூட்கேசில் ஆற்றில் வீசிய வழக்கு: பிரித்தானியருக்கு 8 ஆண்டுகள் கழித்து சிறை

இளம் பெண்ணை கொன்று சூட்கேசில் ஆற்றில் வீசிய வழக்கு: பிரித்தானியருக்கு 8 ஆண்டுகள் கழித்து சிறை

இளம் பெண்ணை கொன்று சூட்கேசில் ஆற்றில் வீசிய வழக்கு: பிரித்தானியருக்கு 8 ஆண்டுகள் கழித்து சிறை

Gallery

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.