ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்திய குரங்குகள்: கூண்டு வைத்து பிடித்த வனத்துறை

வேதாரண்யம் அருகே கோடியக்கரை சரணாலயத்தில் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்திய குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து வனத்துறையினர் காட்டில் விட்டனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் வன உயிரின சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு வெளிமான், புள்ளிமான், குரங்குகள், மட்ட குதிரைகள், நரி, முயல், மயில், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில், இங்குள்ள குரங்குகளுக்கு சுற்றுலா பயணிகள் தின்பண்டங்கள், உணவு ஆகியவற்றை கொடுத்து வந்தனர். இதற்கு வனத்துறையினர் தடைவிதித்ததால் உணவிற்கு குரங்குகள் சிரமப்பட்டன.
image
இதையடுத்து உணவுக்காக சரணாலயத்தில் இருந்து வெளியேறிய 100-க்கும் மேற்பட்ட குரங்குகள் வேதாரண்யம், தோப்புத்துறை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று அங்கேயே தங்கியது. இந்த குரங்குகள் வீடுகளுக்குள் சென்று உணவு பொருட்களை தின்றும், பொதுமக்களை அச்சுறுத்தியும் வந்தன. இதனால் குரங்குகளை பிடித்து சரணாலயத்தில் விட பொதுமக்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
image
இதைத் தொடர்ந்து கோடியக்கரை வனசரகர் அயூப்கான் மேற்பார்வையில் வனத்துறையினர் தோப்புத்துறை காசித்தெருவில் கூண்டு வைத்து குரங்குகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் பிடிபட்ட குரங்குகளை பாதுகாப்பாக கோடியக்கரை சரணாலயத்தில் விட்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.