மாஸ்கோ: ரஷ்யா உடனான கச்சா எண்ணெய் வர்த்தகத்துக்கு இந்தியாவை விட்டால் வேறு எந்த நாடும் தயாராக இல்லை என ரஷ்யா உணர்ந்துள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தற்போது உடல் நலம் தேறி வருகிறார். முன்னதாக வயிற்று புற்றுநோய்க்கு சிகிச்சை பெற தற்காலிகமாக பதவியில் இருந்து வெளியேறினார். தற்போது மீண்டும் பதவி ஏற்றுள்ளார். உக்ரைன்-ரஷ்ய போர் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்க ஐரோப்பிய யூனியன் தடை விதித்தது. அமெரிக்கா, கனடா உள்ளிட்ட மேலை நாடுகளும் ரஷ்யா உடன் வர்த்தகத்தை துண்டித்தன.
இதனையடுத்து கச்சா எண்ணெய் வர்த்தகத்துக்காக சீனா, இந்தியா ஆகிய நாடுகளையே ரஷ்யா நம்பியுள்ளது. மத்திய தரைகடல் நாடுகளில் கிடைக்கும் கச்சா எண்ணெய்போல ரஷ்ய கச்சா எண்ணெயை எளிதில் சுத்திகரிக்க முடியாது. இதற்கு பலகட்ட சுத்திகரிப்பு முறைகள் கையாளப்படுகின்றன. எண்ணெய் சுத்திகரிப்புக்கான அதிநவீன இயந்திரங்கள் இந்தியா, சீனா போன்ற நாடுகள் இடமே உள்ளன.
இலங்கை, இந்தோனேசியா உள்ளிட்ட பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடுகளால் ரஷ்ய எண்ணெயை வாங்கி சுத்திகரிக்க இயலாது. எனவே தற்போது ரஷ்யா தனது கச்சா எண்ணெயை விற்க இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement