ஒருதலை காதலியின் கணவனை கொலை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம், கீரைத்துறை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவருக்கு திருமணமாகி சத்யா என்ற மனைவியும் ராகுல் என்ற மகனும் உள்ளனர். சம்பவதன்று, ராஜேஷ் நண்பர் மருது சூர்யா மற்றும் அவரது கூட்டாளிகளுடன் வெளியே சென்றுள்ளார்.
அப்போது அவர்களுக்கிடயே நடந்த வாக்குவாதத்தால் ராஜேஷை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில், ராஜேஷ் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
மருது சூர்யா கொரொனா காலத்தில் நோய் கணக்கெடுக்கம் பணிகளில் ஈடுப்பட்டுள்ளார். அப்போது, அவர் சத்யாவின் செல்போன் எண்னை வாங்கி நட்பாக பேச ஆரம்பித்தார். அதனை தொடந்து அவர் சத்யாவிற்கு கொரோனாகேர் சென்டரில் தற்காலிக வேலை வாங்கி தந்துள்ளார்.
அதன் பின் அவரை காதலிக்க சொல்லி வற்புறுத்தியதாக தெரிகிறது. இது சத்யாவின் கணவர் ராஜேஷூக்கு தெரியவந்தது. இதனை அடுத்து, மனைவியை தொந்தரவு செய்ய வேண்டாம் என எச்சரித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மருது சூர்யா அவரை கொலை செய்ததது தெரியவந்தது.
இதனை அடுத்து, மருதுசூர்யா அவரது கூட்டாளிகளை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.