Tamil Serial Baakiyalakshmi Rating Update : திருமணத்திற்கு மீறிய உறவு வைத்துக்கொண்டால் கடைசியில் நடுத்தெருவில் தான் நிற்க வேண்டும் என்பதற்கு பாக்யலட்சுமி சீரியல் ஒரு பெரிய உதாரணம். ஆன இதை இவ்வளவு இழுவையா சொல்லிருக்க கூடாது என்று புலம்ப வைத்துள்ள சீரியல்.
விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியலானா பாக்யலட்சுமி சீரியலில் கோபி தனது மனைவி பாக்யாவுக்கு தெரியாமல் முன்னாள் காதலி ராதிகாவை திருமணம் செய்துகொள்ள நினைத்து அதற்கான முயற்சியில் இறங்க, மகா சங்கமத்திற்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ஃபேமிலி, கோபி ரெண்டு குடும்பத்தையும் ஏமாற்றுவதாக சொல்லிவிடுகின்றனர்.
இதனால் அதிர்ச்சியாகும் ராதிகா கோபியிடம் உங்கள் குடும்பத்தை பார்க்க வேண்டும் என்று சொல்ல, முதலில் ஓகே சொல்லும கோபி பிறகு முடியாது என்று சொல்லிவிட, ஆத்திரத்தில் வெளியில் போங்க கோபி என்று பொட்டில் ஆணி அடித்தார் போல் சொல்லிவிடுகிறார் ராதிகா. இதனால் மனமுடையும் கோபி தனது நண்பனுடன் சேர்ந்து குடிக்கிறான்.
தொடர்ந்து இன்றைய எபிசோட்டில், குடித்துவிட்டு ராதிகா வீ்ட்டுக்கு வரும் கோபி, ராதிகாவை சமானதப்படுத்த முயற்சிக்க, குடித்துவிட்டு இங்க எதுக்காக வந்தீங்க வெளியில போங்க என்று ராதிகா சொல்லி விடுகிறாள் இதனால் கோபமாகும் கோபி, இப்போ என்ன என் கும்பத்தை பார்க்க வேண்டும் அவ்வளவு தானே என்று சொல்லி பாக்யாவுடன் இருக்கும் போட்டோவை காண்பிக்கிறான்.
இதை பார்த்து அதிர்ச்சியாகும் ராதிகா இது டீச்சர் என்று சொல்ல ஆமா டீச்சர்தான் என் பெஸ்ட் ஃப்ரண்டுதான் என் வெய்ப் இனியா என் மகள் செழியன் எழில் என் பசங்க என்று உண்மையை உளறிவிடுகிறான். இதனால் அதிர்ச்சியாகும் ராதிகா கீழே விழுந்து அழஆரம்பிக்கிறாள். இதை என்னிடம் மறைத்துவிட்டீர்கள் என்று சொல்கிறாள்.
ஆனால் கோபி அந்த வீட்டில் நான் சந்தோஷமா இல்ல அது என் குடும்பமே இல்ல மயூ நீயும்தான் என் குடும்பம் நீ என்னை விட்டு போய்ட கூடாது என்றூன் அதை மறைத்துவிட்டேன் என்று சொல்கிறான். ஆனால் ராதிகா நீங்க பொய் என்று சொல்லி கோபியை வீட்டை விட்டு வெளியே தள்ளுகிறாள்.
அப்போது கோபியின் ப்ரண்டு கோபிக்கு போன் பண்ண அவன் மொபைலை சுவிட்ச் ஆஃப் செய்துவிடுகிறான். இதனால் பாக்யாவுக்கு போன் செய்யும் கோபியின் ப்ரண்டு, அவன் குடித்திருப்பதாகவும், கௌம்பி ஒரு மணி நேரம் ஆகுது அப்படினா வீட்டுக்கு வந்துருக்கனும், அவன் வந்தவுடன் எனக்கு சொல்லுங்கள என்று சொல்லிவிட்டு போனை வைக்கிறான்.
இதானால் அதிர்ச்சியாகும் பாக்யா வழக்கம்போல் இதை வீட்டிற்கு தெரியாமல் மறைத்துவிடுகிறாள். ஆனாலும கணவனை நினைத்து பாக்யா ஒரு பக்கம் புலம்ப மறுப்பக்கம் தான் ஏமாற்றப்பட்டது குறித்து ராதிகா குமுறி அழுகிறாள். அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு. இப்போது உண்மை தெரிந்த ராதிகா அதை பாக்யாவிடம் சொல்வாளா அல்லது இதற்கும் இன்னும் பல வருடங்கள் இழுத்துக்கொண்டு போவார்களா என்பது இயக்குநருக்கே வெளிச்சம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“