கோமா நிலையில் இல்லை- நித்யானந்தா புதிய பதிவு

புதுடெல்லி:

குஜராத், கர்நாடகா போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடி கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும் சமூக வலைதளங்களில் தினந்தோறும்  வீடியோக்களை வெளியிட்டு பக்தர்கள் மத்தியில் சத்சங்க உரையாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது. இதனை மறுத்து பதிவிட்ட நித்யானந்தா தனது உடல்நலம் குறித்து வதந்திகள் பரப்பப்படுவதாக தெரிவித்திருந்தார்.

அவர் வெளியிட்ட பதிவில், நான் இறக்கவில்லை. சமாதி நிலையில் இருக்கிறேன். 27 டாக்டர்கள் எனக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள் என கூறியிருந்தார்.

அதன்பிறகு அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில் என்னால் உணவு சாப்பிட முடியவில்லை.  எனக்கு தூக்கம் வரவில்லை என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் நித்யானந்தா கோமா நிலைக்கு சென்று விட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவியது. இதற்கு மறுப்பு தெரிவித்து நித்யானந்தா இன்று தனது வலைதள  பக்கத்தில் புதிய பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

சமாதி என்பது முற்றிலும் ஆரோக்கியம். அது உண்மையில் பிரபஞ்ச ஒழுங்குமுறை. பரமசிவனின் அறிவு மற்றும் சக்திகளின் மேலும் உயர்ந்த வெளிப்பாடுகளுக்கு உடல் சீரமைக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.