சரவணனுடன் நடிப்பீர்களா? தமன்னா பதில்
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பரவலாக நடித்து வந்த தமன்னாவிற்கு தற்போது தமிழில் புதிதாக படங்கள் இல்லை. ஆனால் தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடிக்கிறார். சென்னையில் நடைபெற்ற தி லெஜன்ட் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார் தமன்னா. முன்னதாக மீடியாக்களை சந்தித்த தமன்னாவிடம், லெஜெண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தால் அதை ஏற்றுக் கொள்வீர்களா? என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது . அதற்கு தமன்னா, ‛‛சமீபகாலமாக நான் செலக்ட்டிவான படங்களில் மட்டுமே நடித்து வருகிறேன். தேடி வரும் எல்லா படங்களிலும் ஒப்புக் கொள்வவில்லை. அதனால் சரவணன் நடிக்கும் படத்தின் கதையும், எனக்கான கதாபாத்திரமும் பிடித்திருந்தால் நடிப்பேன்'' என்றார் தமன்னா.