சிம்லா:
மத்திய அரசின் 8 ஆண்டு நிறைவை முன்னிட்டு சிம்லாவில் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
முன்னதாக, பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி சிம்லா சென்றார். மாநாட்டிற்குச் செல்லும் வழியில் சாலையின் இருபுறமும் குவிந்திருந்த பா.ஜ.க. தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி தனது காரை திடீரென நிறுத்தச் சொன்னார். சாலையோரம் நின்றிருந்த மக்களில் ஒரு பெண்மணி தனது தாயாரான ஹீரா பென்னின் ஓவியத்தை பரிசளிக்க நின்றிருப்பதைக் கண்டார்.
இதையடுத்து, பிரதமர் மோடி அந்தப் பெண்ணிடம் இருந்து தாயின் ஓவியத்தைப் பெற்றுக் கொண்டு அவருக்குப் பாராட்டு தெரிவித்தார்.