ஜூன் 1ஆம் தேதி எல்பிஜி சிலிண்டர் விலை உயருமா..? என்ன நடக்கப் போகிறது..!

எண்ணெய் நிறுவனங்கள் நாளை ஜூன் 1 ஆம் தேதி எல்பிஜி சிலிண்டர் விலையில் புதிய மாற்றத்தை அறிவிக்கலாம் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மத்திய அரசு சமீபத்தில் பெட்ரோல், டீசல் விலை சுமையைக் குறைக்கக் கலால் வரியை பெரிய அளவில் குறைத்தது. அதற்கு முன்பு 40 நாள் எரிபொருள் விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சமையல் எரிவாயு அதாவது எல்பிஜி சிலிண்டரின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது.

சும்மா எகிறி வரும் கச்சா எண்ணெய் விலை.. தள்ளுபடியில் எண்ணெய் வாங்கிக் குவிக்கும் இந்தியா..!

ஜூன் 1 ஆம் தேதி

ஜூன் 1 ஆம் தேதி

இந்த நிலையில் ஒவ்வொரு மாதத்தின் துவக்கத்தில் சிலிண்டர் விலையை உயர்த்தும் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் எண்ணெய் நிறுவனங்கள் ஜூன் 1 ஆம் தேதி எல்பிஜி விலையை உயர்த்துமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ரஷ்யா - உக்ரைன் போர்

ரஷ்யா – உக்ரைன் போர்

இந்த ஆண்டுத் துவக்கம் முதல் ரஷ்யா – உக்ரைன் போர் அதன் மூலம் ஏற்பட்ட பாதிப்புகள் மூலம் சர்வதேச சந்தையில் காச்சா எண்ணெய் முதல் எரிவாயு விலைகள் அதிகரித்து வருகின்றன. இதன் தாக்கம் தான் தான் தற்போது பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் மற்றும் எல்பிஜி சிலிண்டர் விலையில் ஏற்பட்டு உள்ள உயர்வு.

எல்பிஜி விலை
 

எல்பிஜி விலை

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை கருத்தில் கொண்டு, ஜூன் 1ஆம் தேதி முதல் எல்பிஜி விலை உயர்த்தப்படலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், எண்ணெய் நிறுவனங்கள் மாதத்திற்கு இரண்டு முறை LPG விலை மாற்றத்தை அறிவிக்கின்றன, மாதத்தின் தொடக்கத்தில் ஒரு முறை மற்றும் மாதத்தின் நடுப்பகுதியில் ஒரு முறை.

மே 19 விலை உயர்வு

மே 19 விலை உயர்வு

கடைசியாக மே 19ஆம் தேதி, வீட்டில் பயன்படும் சிலிண்டர் மற்றும் வர்த்தக எல்பிஜி சிலிண்டர்களின் விலை உயர்த்தப்பட்டது. இது மே மாதத்தில் இரண்டாவது முறையாகச் சமையல் எரிவாயுவின் விலை உயர்த்தப்பட்டது.

சிலிண்டர் விலை உயர்வு

சிலிண்டர் விலை உயர்வு

14 கிலோ வீட்டில் பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலை 3.50 ரூபாயும், 19 கிலோ வர்த்தக எல்பிஜி சிலிண்டருக்கு 8 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நடுத்தர மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தியது. இதற்கு முக்கியக் காரணம் விண்ணைப் பிளக்கும் விலைவாசி உயர்வு தான்.

14 கிலோ சிலிண்டர் விலை

14 கிலோ சிலிண்டர் விலை

மே 19ஆம் தேதி விலை உயர்வுக்குப் பின்பு தற்போது டெல்லி மற்றும் மும்பையில் 14 கிலோ சிலிண்டர் விலை 1003 ரூபாயாகவும், கொல்கத்தாவில் ரூ.1029 ஆகவும், சென்னையில் ரூ.1018.5 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

19 கிலோ சிலிண்டர் விலை

19 கிலோ சிலிண்டர் விலை

இதேபோல் 19 கிலோ வர்த்தகச் சமையல் சிலிண்டர் விலை டெல்லியில் ரூ.2354 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.2454 ஆகவும், மும்பையில் ரூ.2306 ஆகவும், சென்னையில் ரூ.2507 ஆகவும் உள்ளது. மே 19ஆம் தேதிக்கு முன்பு மே 7ஆம் தேதி 50 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது.

 கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்

கடந்த ஒரு வாரமாகச் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தொடர்ந்து அதிகரித்தது ஒரு பேரல் 120 டாலருக்கு மேல் உயர்ந்துள்ளது. இதோடு இயர்கை எரிவாயு விலையும் அதிகரித்து வரும் காரணத்தால் ஜூன் 1ஆம் தேதி எல்பிஐ சிலிண்டர் விலை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

LPG cylinder prices will be hiked June 1? Check important reason

LPG cylinder prices will be hiked June 1? Check important reason ஜூன் 1ஆம் தேதி எல்பிஜி சிலிண்டர் விலை உயருமா..? என்ன நடக்கப் போகிறது..!

Story first published: Tuesday, May 31, 2022, 22:00 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.