டிசிஎஸ் முக்கிய அறிவிப்பு: 8% ஊழியர்களுக்கு மட்டும் ஆபீஸ்.. சம்பளம் உயர்வு எவ்வளவு தெரியுமா..?

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை மற்றும் மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தனது ஊழியர்களுக்கான இரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த அறிவிப்பால் டிசிஎஸ் ஊழியர்கள் மட்டும் அல்லாமல் சக போட்டி ஐடி நிறுவனங்களும் அதிர்ச்சி அளித்துள்ளது.

ஏற்கனவே ஐடி நிறுவனங்களின் சிஇஓ மற்றும் பிரஷ்ஷர்களின் சம்பளத்தில் இருக்கும் மிகப்பெரிய வித்தியாசத்தைப் பார்த்து மிரண்டு போயுள்ள ஐடி ஊழியர்கள், கடந்த வருடத்திற்கான சம்பள உயர்வுக்குக் காத்திருக்கின்றனர்.

ஐடி ஊழியர்களே முழிச்சிக்கோங்க.. 10 வருடத்தில் உங்க சம்பளத்தின் நிலைமை என்ன தெரியுமா..?! #CEO #Freshers

வொர்க் ஃபரம் ஹோம்

வொர்க் ஃபரம் ஹோம்

இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகளவில் குறைந்துள்ள நிலையில் அனைத்து முன்னணி மற்றும் வெளிநாட்டு இந்திய கிளைகளும் தங்களது ஊழியர்களைக் கட்டாயம் அலுவலகத்திற்கு அழைத்துள்ளது. ஆனால் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் மட்டும் இதுவரை ஊழியர்கள் அலுவலகத்திற்கு வருவது பற்றி உறுதியான அறிவிப்பை வெளியிடவில்லை.

பணி ராஜினாமா

பணி ராஜினாமா

ஐடி சேவை ஊழியர்கள் பலர் அலுவலகத்திற்கு அழைக்கப்படும் காரணத்தாலே அதிகளவிலானோர் பணியை ராஜினாமா செய்து வரும் காரணத்தால், சில வாரங்களுக்கு முன்பு துவங்கிய அனைத்து பணிகளையும் அப்படியே நிறுத்திவிட்டது. இந்த நிலையில் டிசிஎஸ் முக்கியமான மற்றும் உறுதியான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

8 சதவீத ஊழியர்கள்
 

8 சதவீத ஊழியர்கள்

இந்த மாதம் முதல் டிசிஎஸ் நிறுவனம் உயர் அதிகாரிகளை மட்டும் அதாவது மொத்த ஊழியர்களில் சுமார் 8 சதவீத ஊழியர்களை மட்டும் வாரம் 3 நாட்களுக்குக் கட்டாயம் அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற அறிவுறுத்தியுள்ளது, மற்ற 2 நாட்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி வழங்கியுள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தின் 6 லட்சம் ஊழியர்களில் தற்போது 50000 ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்திற்கு வர உள்ளனர்.

5.5 லட்சம் ஊழியர்கள்

5.5 லட்சம் ஊழியர்கள்

இதன் மூலம் மற்ற 5.5 லட்சம் ஊழியர்களுக்கு அடுத்தச் சில காலம் வீட்டில் இருந்து பணியாற்ற உறுதியான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் தொடர்ந்து இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்பதையும் ராஜேஷ் கோபிநாதன் தலைமையிலான டிசிஎஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சம்பள உயர்வு

சம்பள உயர்வு

கடைசியாக 2022-23ஆம் நிதியாண்டுக்கான சம்பள உயர்வு கடந்த ஆண்டை போலவே சராசரியாக 6-8 சதவீதம் சம்பள உயர்வு அளிக்கப்படும் என டிசிஎஸ் தனது ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது. மேலும் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு ரேட்டிங் கொடுத்திருந்தாலும் சம்பள உயர்வு அளவு குறித்த அறிக்கையை இன்னும் அளிக்கவில்லை.

இந்த வேலைக்கு ஐடி வேலை தேவலாம்..!! பாதுகாப்பா இருக்கலாம்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

TCS WFH and salary Hike Update; 8 percent employees Work From Office, 6-8 percent salary hike

TCS WFH and salary Hike Update; 8 percent employees Work From Office, 6-8 percent salary hike டிசிஎஸ் முக்கிய அறிவிப்பு: 8% ஊழியர்களுக்கு மட்டும் ஆபீஸ்.. சம்பளம் உயர்வு எவ்வளவு தெரியுமா..?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.