வாகன உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம், டிவிஎஸ் ஆட்டோமொபைல் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (TASL) நிறுவனத்தின் 2.76 சதவீத பங்குகளை வைத்திருந்த நிலையில் அந்தப் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
இதன்மூலம் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்திற்கு ரூபாய் 45 கோடி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
டிவிஎஸ் நிறுவனத்தின் பங்குகளை ஜூன் 22ஆம் தேதிக்குள் விற்கும் நடவடிக்கைகளை முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாரிசு கைகளுக்கு மாறிய டிவிஎஸ்.. வேணு சீனிவாசன் முடிவு..!
மஹிந்திரா & மஹிந்திரா
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் தனது கைவசம் வைத்திருந்த 2.76 சதவீதம் பங்குகளையும் முழுமையாக விற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதால் இந்த நடவடிக்கைக்குப் பின்னர் டிவிஎஸ் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் விற்றதாக ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
லாபம்
கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில், உள்நாட்டு விவசாய உபகரணங்கள் மற்றும் பயன்பாட்டு வாகனங்கள் விற்பனையில் ரூ.1,635 கோடி வரிகள் போக லாபத்தை பதிவு செய்தது.
நிகர இழப்பு
இந்த நிலையில் கடந்த நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் தொடர்ச்சியான செயல்பாடுகள் இருந்தும் ரூ.588 கோடி நிகர இழப்பையும் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சந்தித்து இருந்தது.
நம்பர் ஒன்
SUV வருவாய் சந்தையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் மஹிந்திரா & மஹிந்திரா வாகன வணிகத்தில் 45% வளர்ச்சி அடைந்துள்ளது. அதேபோல் பண்ணை உபகரணத் துறை (FES) டிராக்டர்கள் சந்தைப் பங்கு இந்த ஆண்டில் மட்டும் 40% அதிகரித்துள்ளது
ஏற்றுமதி
இந்த நிதியாண்டில் 77% வளர்ச்சியுடன் வலுவான ஆட்டோ ஏற்றுமதி செயல்திறன்
பெற்றுள்ளதோடு, 17.5 ஆயிரம் டிராக்டர்களை ஏற்றுமதி செய்துள்ளது.
M&M announces sale of its entire stake in TVS Automobile Solutions
M&M announces sale of its entire stake in TVS Automobile Solutions |டிவிஎஸ் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் விற்கும் மஹிந்திரா & மஹிந்திரா: என்ன காரணம்?