புதுடெல்லி,
எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து இன்று பெட்ரோல், டீசல் கொள்முதல் செய்யப்போவதில்லை என விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மத்திய அரசின் கலால் வரி குறைப்பின் காரணமாக சில்லறை விற்பனை விலை உடனே மாற்றியதால் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த இழப்பை எண்ணெய் நிறுவனங்கள் ஈடு செய்ய வலியுறுத்தி இன்று ஒருநாள் பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தப்படுவதாக விற்பனையாளர் சங்கத்தினர் கூறியுள்ளனர்.
மேலும், கடந்த 2017 ல் இருந்து இதுவரை விளிம்பு தொகை உயர்த்தப்படவில்லை எனவும், அதை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
இதன் காரணமாக தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட அகில இந்திய அளவில் 24 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் கொள்முதல் இன்று நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.