திருச்சி, மணப்பாறை அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த, மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து வெளியான முதல் கட்ட தகவலின்படி, அந்த பகுதி பொதுமக்கள் கொடுத்த தகவலின்படி கீழ்கண்ட செய்தி சொல்லப்படுகிறது,
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர், திண்டுக்கல் சாலையில் உள்ள அரசு உதவி பெறும் அரசு உதவி பெறும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 6ஆம் தேதி இந்த சிறுமி வீட்டிலிருந்து மாயமாகியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியை சேர்ந்த பத்திரப்பதிவு பதிவாளர் கேசவன் அவரின் தாய் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர்.
மேலும் சிறுமி தான் கடத்தப்பட்டதாக கூறியதால், போக்ஸோ உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. கடந்த 90 நாட்களாக சிறையில் இருந்த மூன்று பேரும் தற்போது வெளிவந்துள்ளனர்.
இன்று அந்த மாணவி வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலை திரும்பி வந்துள்ளார். மணப்பாறை ரயில்வே மேம்பாலம் அருகே மாணவி நடந்து வந்து கொண்டிருக்கும்போது, சிறுமியை வழிமறித்த கேசவன், தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார்.
சிறுமி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கேசவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சிறுமியின் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் 10 க்கும் மேற்பட்ட முறை கத்தியால் குத்தியதாக சொல்லப்படுகிறது.
இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த சிறுமியை மீட்ட அந்த பகுதி மக்கள், மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மேல்குறிப்புட்டுள்ள செய்தி தகவலின் அடிப்படியில் சொல்லப்பட்டுள்ளது. போலீசாரின் விசாரணைக்குப்பின் முழு விவரமும் தெரிவிக்கப்படும்.