மூணாறு : கேரள மாநிலம் மூணாறு அருகே இடமலைகுடி ஊராட்சியில் நடுநிலைப்பள்ளி இல்லாததால் 19 மலை வாழ் பள்ளி மாணவர்கள் தொடர் கல்வி பெற இயலாத அவலம் நீடிக்கிறது.இடமலைகுடியில் அடர்ந்த வனத்தினுள் 28 குடிகளில் (கிராமம்) மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். 2010ல் இம்மக்களுக்கு என தனி ஊராட்சியாக உருவாக்கப்பட்டது. அங்கு சொசைட்டிகுடியில் 1978ல் துவங்கப்பட்ட அரசு ஆரம்ப பள்ளி மட்டும் உள்ளது.
நடுநிலைப்பள்ளி உட்பட வேறு பள்ளிகள் இல்லாததால் தொடர் கல்வி பெற இயலாமல் மாணவர்கள் உள்ளனர். 2016ல் இங்கு ஆய்வு நடத்திய மாநில குழந்தைகள் உரிமைக்குழு நடுநிலை பள்ளி உட்பட உயர்கல்வி பெற வசதிகள் ஏற்படுத்த அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தனர். அதன்படி அரசு ஆரம்ப பள்ளி நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்தப்படும் என 2016- – 17 ஆண்டு பட்ஜெட்டில் அன்றைய நிதியமைச்சர் தாமஸ் ஐசக் அறிவித்தார்.ஆறு ஆண்டுகள் ஆகியும் நடவடிக்கை இல்லை. இன்று பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் நான்காம் வகுப்பு முடித்த 19 மாணவர்கள் தொடர் கல்வி பெற வசதி இன்றி தவித்து வருகின்றனர். மாவட்ட கலெக்டர், முதல்வர் பினராயி விஜயன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Advertisement