நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் பல் மருத்துவக் கல்லூரி சார்பாக உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு ஓடினர்.
உலக புகையிலை ஒழிப்பு தினம் ஆண்டுதோறும் மே 31ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ’புகையிலையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடு’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன்படி திருச்செங்கோடு பல்மருத்துவ கல்லூரி சார்பில் மினி மாரத்தன் போட்டி நடத்தப்பட்டது. நாமக்கல் ரோடு தனியார் திருமண மண்டப வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டம் 5 கிமீ தூரம் கடந்து அவ்வை கே.எஸ்.ஆர் பள்ளி வளாகத்தில் முடிவடைந்தது.
போட்டியை கே.எஸ்.ஆர் பல் மருத்துவக் கல்லூரி முதல்வர் சரத் அசோகன் கொடியசைத்து துவக்கி வைத்தார். போட்டியில் பங்கேற்ற பெண்கள் மற்றும் ஆண்கள் பிரிவினருக்கு முதல் மூன்று இடம் பிடித்த நபர்களுக்கு பரிசுகளும் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM