ஒரு சீசனில் நன்றாக விளையாடிய வீரர்கள், பணத்தால் லட்சியத்தை மறந்துவிட்டனர் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
2022 ஐபிஎல் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள் பலரும் பெரிதளவில் சொதப்பினர். குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர், வருண் சக்கரவர்த்தி ஆகியோரின் மோசமான ஆட்டம் ரசிகர்களை கொந்தளிப்படைய செய்தது.
ஆனால், சீனியர் வீரர்களான ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்கள் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் இந்த ஐபிஎல் சீசனில் சரியாக விளையாடாத வீரர்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.
Photo Credit: Twitter
அவர் கூறுகையில், ‘ஐபிஎல் தொடர் ஒவ்வொரு ஆண்டும் இந்திய அணியின் எதிர்கால நட்சத்திரங்களை கண்டறிகிறது. இது வழக்கமான ஒன்று தான். அதே சமயம் முந்தைய சீசனில் கலக்கிய வீரர்கள் நடப்பு தொடரில் படு மோசமாக சொதப்பியிருந்தனர். ஒரு சீசனில் சதம் அடிப்பது, விக்கெட் எடுப்பதை பார்த்து எதுவும் முடிவு செய்யக்கூடாது என்பது சரியாக தான் உள்ளது.
2வது சீசனிலும் அந்த வீரர் சிறப்பாக விளையாடி இருந்தால் நிச்சயம் அற்புதமான கிரிக்கெட் வாழ்வை பெறுவார்கள். பல ஐபிஎல் நட்சத்திரங்கள் உள்ளூர் போட்டிகளில் பெரிதும் விளையாடவில்லை. ஐபிஎல் தொடரிலேயே அதிகப்படியான பணம் வருவதால் அவர்களின் ஆசைகள் மற்றும் லட்சியங்களும் குறைந்துவிடுகிறது.
இதனால் இந்திய கிரிக்கெட்டிற்கு சற்று பின்னடைவு ஏற்படுகிறது.
கடந்த சீசனில் குறைந்த தொகைக்கு வாங்கப்பட்டு விளையாடிய ருதுராஜ் கெயிக்வாட், வெங்கடேஷ் ஐயர், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் நடப்பாண்டு மெகா ஏலத்தின் போது பல கோடிகளுக்கு தக்கவைக்கப்பட்டனர். ஆனால் மூன்று வீரர்களுமே மோசமாக சொதப்பினர். இதனால் ஒரு சீசனில் கலக்கிய வீரர்கள் மீது ரசிகர்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.
Photo Credit: IPL
இந்த நேரத்தில், வேகப்பந்து வீச்சாளர்களின் அற்புதமான பங்களிப்பு உள்ளது. அவர்கள் துடுப்பாட்ட வீரர்களை டக் அவுட் செய்து, பந்தை வேகமாக வீசி விக்கெட் கீப்பரின் கையுறைகளில் கடுமையாகத் தள்ளினார்கள். உண்மைதான், ஆடுகளங்களில் புல்வெளிகள் நன்றாகப் படர்ந்துள்ளன, அது அவர்களுக்குக் கிடைக்காத கேரியைப் பெற உதவியது’ என தெரிவித்துள்ளார்.
மேலும் உம்ரான் மாலிக், குலதீப் சென், மோசின் கான் மற்றும் முகேஷ் சவுத்ரி ஆகியோர் வேகப்பந்து வீச்சில் அபாரமாக செயல்பட்டதாக பாராட்டியுள்ளார்.
Photo Credit: IPL/BCCI