சீரற்ற வானிலை காரணமாக, நாளைய தினம் தங்களது பரீட்சை மையங்களுக்கு செல்ல முடியாத பரீட்சார்த்திகள், அருகிலுள்ள பரீட்சை நிலையத்திற்கு சென்று பரீட்சை எழுத முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன அறிவித்துள்ளார்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நாளைய தினம் நிறைவடைய உள்ளது.
இந்நிலையில், வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பரீட்சார்த்திகளின் நலனைக் கருத்திற்கொண்டு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.