ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் அரசு பள்ளிக்குள் நுழைந்த தீவிரவாதிகள் அங்கு இருந்த காஷ்மீர் பண்டிட் ஆசிரியையை சரமாரியாக சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜம்முவின் சம்பா மாவட்டத்தை சேர்ந்தவர் ரஜ்னி (36). இவர் குல்காம் மாவட்டத்தில் கோபால்போராவில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று பள்ளிக்குள் நுழைந்த தீவிரவாதிகள் அங்கிருந்த ரஜ்னியை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். பலத்த காயமடைந்த ரஜ்னியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.