திருப்பாச்சேத்தி அருகே பாஜக பிரமுகர் ஓட்டி வந்த கார் மோதிய விபத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உயிரிழந்தார்.
திருப்புவனம் வடகரையைச் சேர்ந்தவர் பிரபாகரன் (48). தீவிர பாஜக ஆதரவாளரான இவர், மோடி மீதான பற்றால் தனது பெயரை மோடி பிரபாகரன் என மாற்றிக் கொண்டுள்ளார். திருப்புவனம் பாஜக ஒன்றிய செயலாளராக உள்ள இவர், நேற்று தனது காரில் மானாமதுரையில் இருந்து 4 வழிச்சாலை வழியாக திருப்புவனம் சென்று கொண்டிருந்தார்.
அப்போது கொத்தங்குளம் விலக்கு என்ற இடத்தின் அருகே வந்தபோது முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளார். இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலரான முருகன் (45) உயிரிழந்தார்.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்புவனம் போலீசார், காரை கைப்பற்றி மோடி பிரபாகரனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM