சண்டிகர் : சுட்டுக் கொல்லப்பட்ட பஞ்சாபி பாடகர் சித்து மோசி வாலாவின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். பஞ்சாபில், முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தை சேர்ந்த சித்து மூசேவாலா, ௨௮, பஞ்சாபி பாடகர். இவர், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், மன்சா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
கடந்த 19ல், மோசி வாலா தன் நண்பர்களுடன் சேர்ந்து, ஜவஹர்கி கிராமத்தில் உள்ள வீட்டுக்கு ஜீப்பில் சென்ற போது, அவரை அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாக சுட்டனர். இதில் மூசேவாலா இறந்தார். இந்நிலையில், மன்சா மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து, மூசே வாலாவின் உடல், அவரது குடும்பத்தினரிடம் நேற்று காலை ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
பின், அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இதிலும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டு, இறுதி அஞ்சலி செலுத்தினர். மூசேவாலா கொலை பற்றி போலீசார் கூறுகையில், ‘இரண்டு நிழல் உலக தாதா கும்பலுக்கு இடையே இருந்த மோதல் காரணமாக மூசேவாலா கொலை செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக முக்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்’ என்றனர்.
Advertisement