பாதுகாப்பு படையினருக்கு வீர தீர விருதுகள்- குடியரசு தலைவர் வழங்கினார்.

டெல்லி:
முப்படைகளின் தளபதியான குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று 2-ம் தொகுதி பாதுகாப்பு விருதுகளை வழங்கினார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாட்டிற்காக உயிரை தியாகம் செய்த வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கீர்த்தி சக்ரா மற்றும் சௌரிய சக்ரா விருதுகளை அவர்களது குடும்பத்தினரிடம் வழங்கினார். 
நிகழ்ச்சியில், அளப்பரிய வீரம், அசாத்திய துணிச்சல், மற்றும் கடமையில் அதீத ஈடுபாடு ஆகியவற்றை வெளிப்படுத்தியதற்காக, பாதுகாப்பு படையினருக்கான வீரதீர விருதுகளும்  வழங்கப்பட்டன.
சிறப்பான சேவைக்காக 13 பரம் விசிஷ்டா சேவா பதக்கங்களையும், 29 அதி விசிஷ்டா சேவா பதக்கங்களையும் குடியரசுத் தலைவர் வழங்கினார்.

இந்திய கடற்படை துணைத் தலைமை வைஸ் அட்மிரல் சதீஷ்குமார் என் கோர்மடே, பரம் விசிஷ்டா சேவா பதக்கத்தை குடியரசுத் தலைவரிடம் இருந்து பெற்றுக் கொண்டார். 
நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.  விருது பெற்றவர்கள்
குடியரசுத் தலைவர், பிரதமருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.