பாலா – சூர்யா படத்தின் தலைப்பு இதுதானா ?
நடிகர் சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரிக்கிறது. ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். தெலுங்கு நடிகை க்ரீத்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் மலையாள நடிகை மமிதா பைஜூவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் .
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்று சமீபத்தில் முடிந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பை ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது .இந்நிலையில் சூர்யா 41 படத்தின் தலைப்பு குறித்து தகவல் இணையத்தில் பரவி வருகிறது . இந்த படத்திற்கு வணங்கான் அல்லது கடலாடி என்று படத்திற்கு தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் தலைப்பு குறித்த அதிகாரபூர்வ அறிவுப்பு விரைவில் வெளியாகலாம்