டெல்லி:
நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்காக பிரதமரின் விபத்து காப்பீட்டு திட்டம், பிரதமரின் ஆயுள் காப்பீட்டு திட்டம் கடந்த 2015 ம் ஆண்டில் இருந்து செயல்படுத்தப்படுகின்றன.
தற்போது இந்த காப்பீட்டு திட்டங்களுக்கான பிரீமியம் தொகை நேற்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி பிரதமரின் விபத்து காப்பீட்டு திட்டத்தின் பிரீமியம் ரூ. 330 என்பதிலிருந்து ரூ.436 ஆகவும் பிரதமரின் ஆயுள் காப்பீட்டு திட்டத்தின் பிரீமியம் ரூ. 12 லிருந்து ரூ. 30 ஆகவும் மாற்றியமைக்கப்படுகின்றன.
கடந்த ஏழு ஆண்டுகளாக பிரீமியம் விகிதங்களில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. முதன் முறையாக இந்த தொகை நேற்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.