பிரதமர் மோடியின் ஆட்சியில் சமூக மேம்பாட்டு திட்டங்கள், அனைவருக்கும் சேரும் வகையில் செயல்படுத்தப்படுகிறது – அமைச்சர் எல்.முருகன்

பிரதமர் மோடியின் ஆட்சியில் சமூக மேம்பாட்டு திட்டங்கள், அனைவருக்கும் சேரும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்ட, மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழகத்தில் 46 லட்சம் விவசாயிகளுக்கு ஆண்டிற்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதாக கூறினார்.

சென்னையில் மத்திய அரசின் கரிப் கல்யாண் சமேளன் திட்ட பயனாளர்களிடம், அத்திட்டம் குறித்து கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் பேசிய எல்.முருகன், தமிழகத்தில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 1 கோடியே 20 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.