தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் பிரித்தானியாவில் ராணி எலிசபெத், பராக் ஒபாமா ஆகியோருடன் கலந்துகொண்ட இரவு விருந்து குறித்த நினைவுகளை பகிர்ந்தார்.
பிரபல ஹாலிவுட் நடிகரான டாம் ஹாங்க்ஸ், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது 2011ஆம் ஆண்டு பக்கிங்கம் அரண்மனையில் இரவு விருந்தில் பங்கேற்றது குறித்து பகிர்ந்துகொண்டார்.
அந்த விருந்தில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, தனது மனைவி மிட்சேலுடன் கலந்துகொண்டார்.
பிரித்தானிய ராணியுடன் விருந்தில் கலந்துகொள்வது குறித்து மகிழ்ச்சியடைந்த டாம் ஹாங்க்ஸ், அவருக்கு அருகில் அமர்ந்துகொள்ள சென்றுள்ளார்.
பின்னர் ராணியுடன் முக்கியமான விடயங்கள் குறித்து பேச ஆவலாக இருந்தாகவும், ஆனால் தன்னை பற்றி பெருமையாக எதுவும் பேசக்கூடாது என்பதில் கவனமாக இருந்ததாவும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, அவர் ராணியுடன் பல விடயங்கள் குறித்து விவாதித்துள்ளார்.
Photo Credit: AP Photo/Lewis Whyld, Pool, File
பின்னர் அவர் கூறுகையில்,
‘எனக்கும் ராணிக்கும் இடையே இருந்த மேசையில் கையுறை அணிந்த கை ஒன்று ஒரு தம்ளரில் நிறமற்ற பானத்தை வைப்பதை கவனித்தேன். ஆனால் அது தண்ணீர் தம்ளர் இல்லை என்பதால் ராணியிடம் தங்களது விருப்பமான காக்டெய்ல் என்ன? என்று துணிந்து கேட்டேன். அதற்கு அவர் ஓ மார்டினி என்று பதிலளித்தார்’ என தெரிவித்தார்.
மேலும், மார்டினி பானத்தை விரும்பி அருந்துவதன் மூலம் அற்புதமான ஆட்சியை ராணி புரிகிறார் என டாம் கிண்டலாக கூறினார்.
Photo Credit: Getty Images