கரூர்:
கரூரில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில், மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதாவது:-
தமிழகம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் சீரான மின் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது.
குஜராத் மாநிலத்தில் தொழிற்சாலைகளில் அறிவிக்கப்பட்ட மின் தடை ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால், தமிழகத்தில் தொழிற்சாலைகளுக்கு சீரான மின் வினியோகம் கொடுக்கப்படுகிறது. மின் வெட்டு குறித்து எதிர்க்கட்சிகள் தவறான கருத்துகளை பேசி மக்களிடம் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் 6 முதல் 7 நாட்கள் வரை நிலக்கரி கையிருப்பில் உள்ளது. ஆனால் தமிழகத்தில் தற்போது காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன் காரணமாக, அனல் மின் நிலையங்களில் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்…
குரங்கு அம்மை எதிரொலி- தமிழக விமான நிலையங்களுக்கு அதிரடி உத்தரவு