முதுமலையில் சபாரி சென்ற வாகனத்தை காட்டு யானை துரத்தும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் தொடர் மழை காரணமாக வனப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக வனப்பகுதிக்குள் காட்டு யானைகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.
இந்த நிலையில் வனப்பகுதிக்குள் சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்ற சபாரி ஜீப் ஒன்றை காட்டு யானை துரத்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. வனப்பகுதி சாலையின் இருபுறங்களிலும் நின்ற காட்டு யானைகளுக்கு நடுவே வாகனத்தை செலுத்த முயற்சி செய்தபோது கோபமடைந்த ஆண் யானை ஒன்று வனத்துறை வாகனத்தை துரத்தி இருக்கிறது.
இந்த சம்பவத்தில் வாகனத்தில் சென்ற யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM