கடந்த மே மாதம் 9ஆம் திகதி அலரி மாளிகைக்கு எதிரே மற்றும் காலி முகத்திடலில் இடம்பெற்ற வன்முறை மற்றும் அமைதியின்மை தொடர்பில் பொரலஸ்கமுவ நகர சபையின் தலைவர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் அவரிடம் இருந்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் மேற்படி வன்முறையுடன் தொடர்புடைய 16 சந்தேக நபர்களை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.