ரூ.86,912 கோடியை ஜிஎஸ்டி இழப்பீடாக விடுவித்தது மத்திய அரசு; தமிழகத்திற்கு ரூ.9602 கோடி விடுவிப்பு

Central govt releases Rs.86.912 crore to states for GST compensation: மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீட்டு தொகையான ரூ.86,912 கோடியை மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளது. இதில் தமிழகத்திற்கு ரூ.9602 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

“மாநிலங்களின் வளங்களை நிர்வகிப்பதற்கும், அவர்களின் திட்டங்கள் குறிப்பாக மூலதனச் செலவுகள், இந்த நிதியாண்டில் வெற்றிகரமாக நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்று மத்திய அரசு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியில் சுமார் ரூ.25,000 கோடி மட்டுமே இருந்த போதிலும், முழுத் தொகையையும் மத்திய அரசு வழங்கியுள்ளது. செஸ் வசூல் நிலுவையில் உள்ள மத்திய அரசின் ஆதாரங்களில் இருந்து மீதிப் பணம் செலுத்தப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்ட ரூ.86,912 கோடியில், ரூ.47,617 கோடி மதிப்பிலான இழப்பீடு ஜனவரி வரையிலும், ரூ.21,322 கோடி பிப்ரவரி-மார்ச் வரையிலும், ரூ.17,973 கோடி ஏப்ரல்-மே வரையிலும் வழங்கப்பட உள்ளது.

தற்போதைய விதிகளின்படி, ஜிஎஸ்டியின் கீழ் வருவாயில் ஏதேனும் இழப்பு ஏற்பட்டால், ஜூன் 30 வரை மாநிலங்களுக்கு ஈடுசெய்ய மத்திய அரசு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: தேர்தல் நிதியாக ரூ.477 கோடியை பெற்ற பாஜக, காங்கிரஸ் ரூ.74.5 கோடி; ஆணையம் தகவல்

ஜூலை 1, 2017 அன்று அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து 14 சதவீத வருடாந்திர ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சியை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை அடைக்க, புது தில்லி 2021-22 நிதியாண்டில் ரூ.1.59 லட்சம் கோடியும், 2020-21 நிதியாண்டில் ரூ.1.1 லட்சம் கோடியும் சந்தையில் இருந்து கடனாக வாங்கி மாநிலங்களுக்கு அனுப்பியது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.