லாக்டவுனில் தளர்வுகள்.. துள்ளிக் குதிக்கும் சீன மக்கள்.. இந்தியாவுக்கும் நல்ல விஷயம் தான்.. எப்படி?

உலகிற்கு கொரோனாவை அறிமுகப்படுத்திய டிராகன் தேசம், கடந்த 2 மாதங்களாக லாக்டவுனால் சிக்கி சீரழிந்து வந்தது. இதன் காரணமாக உலக நாடுகளில் மூலதன பொருட்கள் பற்றாக்குறையால் பணவீக்கம் மிகப்பெரியளவில் உச்சம் தொட்டது.

இது பொருளாதாரத்தில் மிகப் பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இரு மாதங்களுக்கு பிறகு லாக்டவுனில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் இனி வரவிருக்கும் மாதங்களில் மீண்டும் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

30 மணி நேரத்திற்கு ஒரு கோடீஸ்வரரை உருவாக்கிய கொரோனா.. ஏழைகளின் நிலை?

போக்கு வரத்து தொடக்கம்

போக்கு வரத்து தொடக்கம்

குறிப்பாக பொது போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இது மக்கள் வேலைக்கு செல்ல முடியும். எனினும் பலவிதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஒவ்வொரு 72 மணி நேரத்திற்கும் ஒரு முறை கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட வேண்டும். ஒரு வேலை பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டால் அவர் தனிமைப்படுத்தப்படுவார்.

முகக் கவசம் கட்டாயம்

முகக் கவசம் கட்டாயம்

அதோடு சீனாவின் மிக முக்கியமான உற்பத்தி நகரமான ஷாங்காயில் முகக்கவசம் கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் ஒன்று கூடுவதையும் தவிர்க்க வேண்டும். உணவகங்களுக்குள் அமர்ந்து உண்ண தடை விதிக்கப்பட்டுள்ளது. கடைகள் 75% திறனில் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதற்கெல்லாம் அனுமதி?
 

எதற்கெல்லாம் அனுமதி?

பள்ளிகளுக்கு மாணவர்கள் விருப்ப அடிப்படையில் வரலாம். ஷாப்பிங் மால்கள், சூப்பர் மார்கெட்கள் பலவிதமான கட்டுப்பாடுகளுடன் மக்களின் தேவைக்காக திறக்கப்பட்டுள்ளது. மருந்து கடைகளும் மொத்த திறனில் 75% திறனுடன் திறக்கப்படும். சினிமா தியேட்டர்கள், ஜிம்கள் வழக்கம்போல மூடப்பட்டுள்ளது.

 கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

சில குடியிருப்பாளர்களுக்கு பாஸ்களுடன் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது மார்ச் மாத இறுதிக்கு பிறகு நகரத்திற்கு சுதந்திரமாக பயணம் செய்ய முடியும்.

ஏப்ரல் மாதத்தில் தினசரி 20,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த திங்கட்கிழமை நிலவரப்படி 29 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜீரோ கோவிட் பாலிசி

ஜீரோ கோவிட் பாலிசி

சீனாவில் ஜீரோ கோவிட் பாலிசி காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது லாக்டவுனில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சப்ளை சங்கிலியில் ஏற்பட்டிருந்த பிரச்சனை முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் இந்தியா போன்ற இறக்குமதி நாடுகளில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை பிரச்சனை முடிவுக்கு வரலாம் என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Several relaxations in 2 month lock down in China

Strict lock downs have been in place in China for the past two months. At present the impact of the corona has diminished and a number of relaxations have been made.

Story first published: Tuesday, May 31, 2022, 18:44 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.