இந்தியாவின் சமூக வலைதள செயலியான ஷேர்சாட் நிறுவனத்தில் 300 மில்லியன் டாலர் கூகுள் நிறுவனம் முதலீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
சீனாவின் சமூக வலைத்தள செயலிகளான ஹலோ, டிக்டாக் உள்பட ஒரு சில சமூக வலைதளங்களுக்கு இந்திய அரசு தடை விதித்ததை அடுத்து இந்தியாவின் சமூக வலைதளமான ஷேர்சாட் செயலிக்கு வாடிக்கையாளர்கள் அதிகரித்தனர்.
குறிப்பாக டிக்டாக், ஹலோ தடை செய்யப்பட்ட ஒரே வாரத்தில் மில்லியன் கணக்கில் புதிய வாடிக்கையாளர்கள் ஷேர்சாட்டில் இணைந்தனர். இதனால் இந்நிறுவனத்தின் மதிப்பு உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கம் விலை சரிவா.. சென்னையில் என்ன நிலவரம்?
ஷேர்சாட்
இந்த நிலையில் ஷேர் சாட் நிறுவனத்தில் 300 மில்லியன் டாலர் நிதி உதவி செய்ய கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூகுள் நிறுவனத்தின் இந்த நிதி உதவி இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
போட்டி
ஜோஷ் உள்பட ஒருசில செயலிகள் ஷேர்சாட் செயலிக்கு போட்டியாக இருந்தாலும் ஷேர்சாட் நிறுவனம் தற்போது நல்ல லாபத்தை பெற்று வருகிறது என்பது அந்நிறுவனத்தின் முதலீடு ஆய்வறிக்கையில் இருந்து தெரியவருகிறது.
வாடிக்கையாளர்கள்
ஷேர்சாட் செயலியில் மாதந்தோறும் 180 மில்லியன் வாடிக்கையாளர்கள் ஆக்டிவ்வாக உள்ளனர் என்றும், இந்த செயலியின் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 300 மில்லியனை தாண்டி விட்டது என்றும் கூறப்படுகிறது.
மதிப்பு
சமீபத்தில் ஷேர்சாட் நிறுவனத்தின் மதிப்பு 3.7 பில்லியன் டாலர் என கணக்கிடப்பட்டது. இந்நிறுவனத்தில் முதலீடு செய்ய பல முன்னணி நிறுவனங்கள் போட்டியிட்ட நிலையில் தற்போது கூகுள் நிறுவனம் முதலீடு செய்வதால் இந்நிறுவனத்தின் வளர்ச்சி எதிர்காலத்தில் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இணையதளங்கள்
ஷேர் சாட் செயலியில் தமிழ் உள்பட பல மொழிகளில் இயங்கிவரும் இணையதளங்கள் தாங்கள் பதிவு செய்யும் செய்திகளை அந்த செயலில் பகிர்ந்து வருகின்றனர் என்பதும் இதனால் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் பெரும் பலன் பெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Google Helps ShareChat Raise $300 Million In Funding Round
Google Helps ShareChat Raise $300 Million In Funding Round | ஷேர்சாட் நிறுவனத்தில் முதலீடு செய்யும் கூகுள்: எத்தனை மில்லியன் டாலர் தெரியுமா?