புதுடெல்லி: குஜராத் மாநிலத்தில் கடந்த 2015ம் ஆண்டு படிதார் சமூகத்திற்கான இட ஒதுக்கீட்டிற்காக போராட்டம் நடத்தி மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட நபர்களுள் ஒருவர் ஹர்திக் படேல். இதையடுத்து அவர், குஜராத் மாநில காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். உட்கட்சி பூசல் காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த மாதம் ஹர்திக் படேல் வெளியேறினார். இந்நிலையில் ஹர்திக் படேல் பாஜவில் இணையப் போவது உறுதியாகி உள்ளது. ஹர்திக் படேல் நாளை பாஜவில் இணைய இருப்பதாக அம்மாநில பாஜ மூத்த தலைவர்கள் நேற்று தெரிவித்தனர்.