உலகளவில் ஆன்லைன் சேவைகள் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் கிக் எகானமி அதாவது ஆன்லைன் டெலிவரி சேவை, ப்ரீலேன்சர் போன்ற பணிகளைச் செய்யும் ஊழியர்கள், இத்தகையை வேலைவாய்ப்பைக் கொடுக்கும் நிறுவனங்கள் என அனைத்தையும் ஒழுங்கு முறைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் உள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இந்திய பெண் ஒருவர் தொடுத்துள்ள வழக்குத் தற்போது சட்டமாக மாறும் அளவிற்குப் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
ஆன்லைன் வங்கி பரிவர்த்தனை செய்பவரா நீங்க.. கண்டிப்பா இதை படியுங்க..!
ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமிதா குப்தா என்பவர் உபர் ஈட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பணியில் ஒரு வாரத்தில் அமிதா குப்தா ஒரு டெலிவரிக்குச் செல்லும் போது 10 நிமிடம் தாமதமாகச் சென்றுள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமிதா குப்தா
இதைத் தொடர்ந்து உபர் ஈட்ஸ் அமிதா குப்தா-வை பணிநீக்கம் செய்தது. மேலும் ஒரு வாரத்தில் 96 மணி நேரம் வேலை செய்த அமிதா குப்தா-விற்கு வெறும் 300 ஆஸ்திரேலியா டாலர் மட்டுமே சம்பளமாகக் கொடுக்கப்பட்டு உள்ளது. இது சந்தை அளவுக்கு மிகவும் குறைவான சம்பளம் என்பதால் அமிதா குப்தா 2019ல் வழக்கு தொடுத்தார்.
4,00,000 டாலர்
இந்த வழக்கின் முதல் கட்ட விசாரணையின் போதே உபர் தனது தவறை உணர்ந்து அமிதா குப்தா-விற்கு நீதிமன்றத்திற்கு வெளியில் சுமார் 4,00,000 டாலர் கொடுத்து வழக்கை முடித்துள்ளது. ஆனால் இந்த வழக்கு கிக் (Gig) தொழிலாளர்களுக்கு அடிப்படை வேலை உரிமைகளை வழங்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது என்று ஒரு புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு குறைபாடு
ஃபிளிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் ஆராய்ச்சியாளர்களின் வெளியிட்டுள்ள அறிக்கையில் அமிதா குப்தா வழக்கு மூலம் போதிய சட்ட சீர்திருத்தங்கள், தொழிற்சங்கங்களின் வரையறுக்கப்பட்ட அதிகாரம் மற்றும் இந்தப் புதிய பொருளாதாரத் துறையை உள்ளடக்கிய பிற பாதுகாப்புகள் இல்லாதது கிக் தொழிலாளர்களுக்குத் தொடர்ந்து பாதகமாக உள்ளது.
ஊழியர்கள்
இதனால் ஆதிக்கம் நிறைந்த ஊழியர்கள் இத்துறையில் இருக்கும் ஊழியர்களை முறைகேடாகப் பயன்படுத்திக் கொண்டும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் நிலை உருவாகிறது என ஃபிளிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தின் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
2020 ஆண்டு வழக்கு
மேலும் இதுபோன்ற ஆன்லைன் டெலிவரி சேவை நிறுவனங்கள் பணியை ஒதுக்குவதற்கும் நிர்வகிப்பதற்கும் ஒரு அல்காரிதத்தைப் பயன்படுத்துவதாக 2020 வழக்கில் விளக்கம் கொடுத்தது. இதன் மூலம் தொழிலாளர்களுக்கு நெகிழ்வுத்தன்மை மற்றும் சுயாட்சியை வழங்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது.
நெகிழ்வுத்தன்மை மற்றும் சுயாட்சி
தற்போது ஃபிளிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் மரினெல்லா மர்மோ இந்த நெகிழ்வுத்தன்மை மற்றும் சுயாட்சியை ஊழியர்களுக்கு வழங்கும் வகையில் கட்டமைப்பை மாற்றி அமைக்க வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளது.
அதிகாரம்
இதே தளத்தில் ஒரு ஊழியர் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப எவ்வளவு டெலிவரிகளைச் செய்ய வேண்டும், எவ்வளவு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வாய்ப்பை ஊழியர்கள் கையில் கொடுக்க வேண்டும். இதன் மூலம் நிறுவனங்களின் ஆதிக்கம் குறைக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
கிக் எக்னாமி
அமிதா குப்தா-வின் வழக்குத் தற்போது ஆஸ்திரேலிய கிக் வேலைவாய்ப்புச் சந்தையில் புதிய சட்ட திருத்தத்தைக் கொண்டு வரும் என எதிர்பார்ப்பதோடு, கிக் எக்னாமி துறை ஊழியர்களுக்குக் கூடுதலான பாதுகாப்பு கிடைக்க உள்ளது.
Uber Eats fired an Amita Gupta 10 minutes late for delivery; calls for gig worker law reform
Uber Eats fired an Amita Gupta 10 minutes late for delivery; calls for gig worker law reform 10 நிமிசம் லேட்டு, இந்திய பெண்-ஐ வேலையை விட்டு துரத்திய உபர்..! இப்போ புதிய சட்டமே வருகிறது..!