இந்திய தனியார் வங்கிகளில் முன்னணி வங்கியான எச்டிஎஃப்சி வங்கி அடுத்த 3 ஆண்டுகளில் 4000 முதல் 6000 வரை புதிய கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எச்டிஎப்சி வங்கியின் தலைமை செயல் அதிகாரி சீனிவாசன் வைத்தியநாதன் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில் இதனை உறுதி செய்தார்.
ஒவ்வொரு ஆண்டும் 2000 புதிய கிளைகள் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
டெல்லிவரியின் காலாண்டு நிதி அறிக்கை: எத்தனை கோடி லாபம் தெரியுமா?
இலக்கு
அதிகரித்து வரும் கடன் தேவையை பூர்த்தி செய்யவும், டெபாசிட்டுக்களின் சேகரிப்பை அதிகரிக்கவும் எச்டிஎஃப்சி வங்கி இலக்காக கொண்டுள்ளது என்றும், அதற்காக அதிக கிளைகளை திறக்க முடிவு எடுத்துள்ளதாகவும், அடுத்த 3 ஆண்டுகளில் இந்த இலக்கை அடைய நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும் எச்டிஎப்சி வங்கியின் தலைமை செயல் அதிகாரி சீனிவாசன் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
புதிய கிளைகள்
எங்கள் இலக்கை நோக்கி நாங்கள் பயணம் செய்து கொண்டு இருக்கிறோம் என்றும் கடந்த ஆண்டு 730 புதிய கிளைகளை திறந்த நிலையில், அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் 1,500 முதல் 2,000 கிளைகள் திறக்கும் எண்ணம் எங்களிடம் உள்ளது என்றும், அதன்படி அடுத்த மூன்று ஆண்டுகளில் 6,000 புதிய கிளைகளைத் திறப்பதே தங்களது இலக்கு என்றும் எச்டிஎப்சி வங்கியின் தலைமை செயல் அதிகாரி சீனிவாசன் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல்
இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின்படி எச்டிஎப்சியின் பெரும்பாலான வங்கிகள் டிஜிட்டல் மயமாகி உள்ளது என்பது இந்த வங்கியின் கூடுதல் சிறப்பு ஆகும். நகரங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களில் உள்ள வங்கிகளிலும் டிஜிட்டல் சேவைகளை எச்டிஎப்சி வங்கி வழங்கி வருகிறது.
டிஜிட்டல் பேங்கிங் யூனிட்டுகள்
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது டிஜிட்டல் வங்கியின் நலன்கள் குறித்து கூறியதை எச்டிஎஃப்சி வங்கி பின்பற்றி வருகிறது என்றும், டிஜிட்டல் வங்கியின் பலன்கள் ஒவ்வொரு பகுதிக்கும் சென்றடைவதை உறுதி செய்ய 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் பேங்கிங் யூனிட்டுகள் அமைக்கப்படும் என்றும் சீனிவாசன் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
மொத்த கிளைகள்
எச்டிஎப்சி வங்கியானது கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில் 563 புதிய கிளைகளுடன் மொத்தம் 6,342 கிளைகளாக இயங்கி வருகிறது. இந்த வங்கியின் மொத்த வைப்புத்தொகை மார்ச் 31 நிலவரப்படி முந்தைய ஆண்டிலிருந்து 16.8% உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
HDFC Bank plans to double its branches in 3 years
HDFC Bank plans to double its branches in 3 years | 3 ஆண்டுகளில் 6000 புதிய கிளைகள்: எச்டிஎஃப்சி வங்கி திட்டம்