புற்றுநோய் முற்றி விட்டதால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அதிகபட்சமாக மூன்றாண்டுகள் வாழலாம் என்று மருத்துவர்கள் கணித்துள்ளதாக உளவாளி கூறிய தகவல் ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உடல்நிலை குறித்து பல்வேறு விதமான தகவல்கள் வந்த வண்ணமே உள்ளன. இதுவரை எதையுமே ரஷ்ய அரசு தரப்பு உறுதி செய்யவில்லை. அண்மையில் அவருக்கு ரத்தப் புற்றுநோய் முற்றி விட்டதால் அறுவை சிகிச்சை செய்யப் போகிறார். அதனால், அவர் தனது அதிகாரங்களை தற்காலிகமாக பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள தனது நம்பிக்கைக்குரிய நிக்கோல் பாத்ருசேவுக்கு வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர்
புடின் உடல்நிலை
குறித்து மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக இண்டிபெண்டன்ட் இதழில் ரஷ்ய உளவாளி அளித்த தகவல் பிரசுரம் செய்யப்பட்டு உள்ளது. அந்த உளவாளி கூற்றின்படி, ரஷ்ய அதிபர் புதினுக்கு புற்றுநோய் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது. மருத்துவர்கள் அவர் 3 ஆண்டுகள் வரை உயிர் வாழலாம் என்று கணித்து உள்ளதாகவும் அந்த உளவாளி தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது.
துப்பாக்கி வைத்திருக்கும் உரிமம் முடக்கம்: பிரதமர் அதிரடி அறிவிப்பு
பிரிட்டனில் வாழும் முன்னாள் ரஷ்ய உளவாளி போரிஸ் கார்பிச்கோவ், ரஷ்ய அதிபரின் புதினின் உடல்நிலை சரியில்லை என்பதை உறுதி செய்துள்ளதும் அச்செய்தியில் மேற்கோள் காட்டப்பட்டு உள்ளது. அதிபர் புதினுக்கு தலைவலி ஏற்படுவதாகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஏதாவது வாசிக்க நேர்ந்தால் அதை மிகப்பெரிய எழுத்துகளாக தாளில் எழுதினாலே அவரால் படிக்க முடிகிறது.
அதாவது ஒரு பக்கத்தில் இரண்டே வாக்கியங்கள் என்ற அளவில் வார்த்தைகளை பெரிதாக எழுதினாலே அவரால் அதை வாசிக்க முடிகிறது. அவரது கண் பார்வை நாளுக்கு நாள் மங்கி வருகிறது என்றும் செய்தி வெளியாகி உள்ளது. எனினும், இந்த தகவல்களை ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.