அழுக்கைப் போக்க நீங்கள் உச்சந்தலையில் சேர்க்கும் அனைத்து இரசாயனப் பொருட்களும் அதன் தரத்தை மோசமாக்கும். இதனால்தான் தாய்மார்களும் பாட்டிகளும் கூந்தல் பராமரிப்புக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட இயற்கை வைத்தியங்களைப் பயன்படுத்துவதை எப்போதும் வலியுறுத்துகின்றனர்.
இந்த ஹோம்மேட் ஷாம்பு, விலையுயர்ந்த ஷாம்பூக்களைப் போன்ற அதே முடிவுகளைத் தரும். இனி தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களால் உங்கள் கூந்தலை அழிக்க தேவையில்லை.
இந்த ஹோம்மேட் ஷாம்பூக்கள் உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் மிகவும் சிறப்பாக செயல்படுகின்றன. இதோ வீட்டில் நீங்களே சொந்தமாக செய்யக்கூடிய, ஷாம்புகளுக்கான குறிப்புகள் கீழே உள்ளன.
சீகைக்காய், ரீத்தா மற்றும் நெல்லி
இந்த பொருட்கள் அனைத்தையும் இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும். காலையில் அடுப்பில் வைத்து, பொருட்கள் கொதிக்க ஆரம்பிக்கும் வரை சூடாக்கி, தீயை குறைத்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
அடுப்பில் இருந்து இறக்கி, மூடி வைத்து ஆறவிடவும். அறை வெப்பநிலைக்கு வரும்போது, ரீத்தா, சீகைக்காய் மற்றும் நெல்லிக்காயை உங்கள் கையால் நசுக்கவும். பயன்படுத்துவதற்கு முன் வடிகட்டவும்.
தேன், முட்டை, எலுமிச்சை சாறு மற்றும் ஆலிவ் எண்ணெய்
2 முட்டைகளை 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறுடன் கலக்கவும். இப்போது, கலவையில் 1 தேக்கரண்டி தேன் மற்றும் 3 சொட்டு ஆலிவ் எண்ணெய் சேர்க்கவும். இந்த பேஸ்ட்டை உங்கள் தலைமுடியின் வேர் முதல் நுனி வரை மசாஜ் செய்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். உங்கள் தலைமுடியில் முட்டையின் வாசனையை உங்களால் பொறுத்துக்கொள்ள முடியாவிட்டால், ரோஸ் வாட்டரில் கடைசியாக அலசவும்.
கிரீன் டீ
ஒரு கப் வெந்நீரில் கிரீன் டீ பைகளை 10 நிமிடங்கள் ஊறவைத்து, பின்னர் ஆறவிடவும். இதனுடன் சிறிது ரீத்தா தூள் சேர்த்து கலக்கவும், உங்கள் தலைமுடியைக் கழுவ இந்த கலவையைப் பயன்படுத்துங்கள்.
ஒரு கிண்ணத்தில் 3-4 டீஸ்பூன் கடலை மாவு, 2 டீஸ்பூன் தயிர் மற்றும் எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்ளவும். சிறிது தண்ணீர் கலந்து, இந்த கலவையுடன் உங்கள் தலைமுடியைக் கழுவவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“