புது டெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் iQOO Neo 6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் உள்ளிட்ட விவரங்களை விரிவாக பார்ப்போம்.
சீன நாட்டின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று தான் iQOO. இந்த நிறுவனத்தின் அண்மைய வரவாக அமைந்துள்ளது Neo 6 ஸ்மார்ட்போன்.
இந்தியாவில் அறிமுகமாகி உள்ள முதல் Neo சீரிஸ் போன் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. கேம் விளையாட இந்த போன் சிறப்பானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இந்த போனை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார் iQOO நிறுவன இந்திய தலைமை நிர்வாக அதிகாரி நிபுண் மர்யா.
சிறப்பு அம்சங்கள்
- 6.62 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். E4 டிஸ்ப்ளே பேனலையும் கொண்டுள்ளது.
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 புராசஸர்.
- 8ஜிபி மற்றும் 12ஜிபி ரேம் வேரியண்ட்டுகள் இந்த போனில் உள்ளது.
- 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.
- பின்பக்கத்தில் மூன்று கேமரா உள்ளது. அதில் 64 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரைமரி கேமரா. 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.
- 4700mAh பேட்டரி 80 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட் உடன் இடம்பெற்றுள்ளது.
8ஜிபி+128ஜிபி வேரியண்ட் ரூ.29,999 மற்றும் 12ஜிபி+128ஜிபி வேரியண்ட் ரூ.33,999-க்கும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் இந்த போனை வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 3000 ரூபாய் வரையில் அறிமுக சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது.