NEET 2022 free mock test and previous year papers download here: மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு வருகின்ற ஜூலை 17 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்வுக்கான முந்தைய ஆண்டு வினாத்தாள்களை பெறுவது எப்படி? மாதிரி தேர்வுகளை இலவசமாக பயிற்சி செய்வது எப்படி? என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (நீட் தேர்வு) தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்த நீட் தேர்வு பேப்பர் மற்றும் பேனா அடிப்படையிலான எழுத்துத் தேர்வாக நடைபெறும். நீட் தேர்வு வினாத்தாள் 200 கொள்குறிவகை வினாக்களைக் கொண்டிருக்கும். இதற்கான கால அளவு 3 மணி 20 நிமிடங்கள்.
நீட் நுழைவுத் தேர்வு ஆங்கிலம், இந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறுகிறது.
நீட் நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டம் இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய நான்கு பாடங்களைக் கொண்டிருக்கும். நீட் வினாத்தாளில் ஒவ்வொரு பாடமும் ஒரு பிரிவில் உள் தேர்வுகளுடன் இரண்டு பிரிவுகளைக் கொண்டிருக்கும். பிரிவு A யில் 35 கேள்விகள் இருக்கும், பிரிவு B 15 கேள்விகளைக் கொண்டிருக்கும், அதில் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் 10 கேள்விகளைத் தேர்வுசெய்யலாம்.
நீட் தேர்வுக்கு தயாராகுபவர்கள் எளிதாக பயிற்சி பெறும் வகையில், தேசிய தேர்வு முகமை முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் மற்றும் இலவச மாதிரி தேர்வுகளை வழங்குகிறது. இது தேர்வர்களின் வேகத்தையும் துல்லியத்தையும் மேம்படுத்த உதவும். இந்த முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் மற்றும் மாதிரி தேர்வு ஆகிய இரண்டும், தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் உள்ளது.
இதையும் படியுங்கள்: நீட் தேர்வு 2022; தேர்வு முறை, சிலபஸ் குறித்த முக்கிய தகவல்கள் இதோ…
மாணவர்கள் எளிதாக அணுக கீழ்கண்ட இணைப்பை கிளிக் செய்யலாம்.
முந்தைய ஆண்டு வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்ய: https://nta.ac.in/Downloads
மாக் டெஸ்ட் (மாதிரி தேர்வு) பயிற்சி பெற : https://nta.ac.in/Quiz