ராமேஸ்வரம்: மீனவப் பெண் கொலை… வலுக்கும் போராட்டம்!

ராமேஸ்வரத்தில் கடந்த 24-ம் தேதி கடலுக்குப் பாசி எடுக்கச் சென்ற மீனவப் பெண் ஒருவர், இறால் பண்ணைக்கு வேலைக்கு வந்த வடமாநில வாலிபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ராமேஸ்வரம் மீனவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் சம்பவம் நடந்து ஆறு நாள்கள் கடந்தும் இதுவரை பாதிக்கப்பட்ட மீனவப் பெண்ணின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நிவாரணமோ அல்லது அனுதாபமோ தெரிவிக்கவில்லை எனக் கூறி, ராமேஸ்வரம் … Read more

மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நிறைவு.. 6 பேரும் போட்டியின்றி தேர்வாகின்றனர்

மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், திமுக, காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்கள் ஆறு பேரும் போட்டியின்றி தேர்வாக உள்ளனர். தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல், ஜூன் 10ஆம் தேதி நடைபெறவுள்ளது.  திமுக சார்பில் கல்யாணசுந்தரம், கிரிராஜன், ராஜேஸ்குமாரும், அதிமுக சார்பில் சி.வி.சண்முகம் மற்றும் தர்மர் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரமும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். சுயேட்சை வேட்பாளர்கள் 7 பேரும் தங்களை முன்மொழிய … Read more

மதுரை, ராமேஸ்வரம் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகளை கவனித்து வரும் பொறியாளர் தம்பதியர்

மதுரை: மதுரை மற்றும் ராமேஸ்வரம் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகளை தலைமை தாங்கி கவனித்து வருகின்றனர் பொறியாளர் தம்பதியர். தம்பதியர்களில் கணவர் மதுரை ரயில் நிலைய பணிகளையும், மனைவி ராமேஸ்வரம் ரயில் நிலைய பணிகளையும் கவனித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 26-ஆம் தேதி நடைபெற்ற விழாவில் எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி, கன்னியாகுமரி ஆகிய ரயில் நிலையங்களை சுமார் 1800 கோடி ரூபாய் மதிப்பில் மறுசீரமைப்பு செய்வதற்கான பணிகளை துவக்கி வைத்தார். இதில் மதுரை … Read more

குரங்கு அம்மைக்கும் வருகிறது தடுப்பூசி!

கொரோனா பரவலை தொடர்ந்து குரங்கு அம்மை நோய் தற்போது பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 200 பேருக்கு குரங்கு அம்மை நோய் பாதித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. குறிப்பாக, இங்கிலாந்தில் மட்டும் 70 பேருக்கு புதிதாக குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. புதிதாக நோய் தொற்று ஏற்பட்டாலும் பொதுமக்களுக்கு ஆபத்து குறைவே என்றும் … Read more

Realme GT Neo 3T: ரியல்மி ஜிடி நியோ 3டி அறிமுக தேதி, எதிர்பார்ப்பு விலை மற்றும் அம்சங்கள்!

Realme GT Neo 3T: ரியல்மி நிறுவனம் தனது புதிய டி சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. ரியல்மி ஜிடி நியோ 3டி ஸ்மார்ட்போன், ஜூலை 7 ஆம் தேதி இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதனை உறுதிபடுத்தும் பதிவை, தனது ட்விட்டர் பக்கத்தில் நிறுவனம் வெளியிட்டுள்ளது. முன்னதாக, ஜூன் மாதம் இந்த போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல்கள் தெரிவித்தன. தற்போது NTBC, BIS, 3C சான்றிதழ் பதிவினை ரியல்மி ஜிடி நியோ 3டி வெற்றிகரமாக … Read more

துமிந்த சில்வாவிற்கு கோட்டாபய வழங்கிய பொது மன்னிப்பை இடை நிறுத்தி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இடைக்கால உத்தரவு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கோட்டாபய வழங்கிய பொது மன்னிப்பின் செயற்பாட்டை உயர்நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது. இலங்கையின் உயர்நீதிமன்றம் இது தொடர்பில் இன்று இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. மரண் தண்டனை தீர்ப்பு 2016, செப்டெம்பர் மாதம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை தொடர்பில் அவருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது. எனினும் 2021, ஜூன் 24 ஆம் திகதியன்று அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் விசேட ஜனாதிபதி மன்னிப்பின் … Read more

உக்ரைனின் ராடார் நிலையம் மற்றும் இரண்டு வெடிமருந்து கிடங்குகளை குண்டு வீசி தாக்கியதாக ரஷ்யா தகவல்!

உக்ரைனின் ராடார் நிலையத்தை தாக்கியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.  உக்ரைனின் மைகோலெய்வ் பிராந்தியத்தில் Su-25 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவும், கிழக்கு உக்ரைனில் உள்ள ராடார் நிலையம் மற்றும் இரண்டு வெடிமருந்து கிடங்குகளை குண்டுவீசித் தாக்கியதாகவும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. Source link

ஆட்களை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம்.. உடைந்து விழுந்த வாகனத்தின் பின்பகுதி.. காயமடைந்த பயணிகள்..

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்களை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம், சாலையில் வளைந்த போது அதன் பின்பகுதி உடைந்து விழுந்ததில் அதில் பயணித்தவர்கள் காயமடைந்தனர். அம்மாநிலத்தின் நாசிக் அருகே, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சரக்கு வாகனத்தில், சிறுவர்கள், முதியவர்கள் என 10க்கும் மேற்பட்டோர் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த வாகனம் வேகமாக வளைந்தபோது, அதன் பின்பகுதி உடைந்து கவிழ்ந்ததில் அதில் இருந்தவர்கள் சாலையில் விழுந்து காயமடைந்தனர். Source link

பள்ளிக்குள் புகுந்து சரமாரி துப்பாக்கிச்சூடு! ஆசிரியை பரிதாப பலி

காஷ்மீரில் அரசுப் பள்ளிக்கூடத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஆசிரியை பலியானார். ஜம்முவின் சம்பா மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்னி பாலா(36) என்ற பெண், காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், இன்று காலை பள்ளியில் திடீரென நுழைந்த பயங்கரவாதிகள் ராஜ்னி பாலாவை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். மேலும் பலர் படுகாயமடைந்தனர். அதன் பின்னர் பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு சத்தம் … Read more

சென்னை பெரியமேடு, சூளை பகுதியில் இருசக்கர வாகனத்தில் பட்டாக்கத்திகளுடன் ரவுடிகள் அட்டூழியம்! 3 பேருக்கு வெட்டு…

சென்னை: சென்னை வேப்பேரி, சூளைமேடு, பெரியமேடு சாலையில்,  பட்டாக்கத்திகளுடன் 3 ரவுடிகள் இருசக்கர வாகனத்தில் கையில் பட்டாக்கத்தியை சுழற்றிக்கொண்டு அட்டூழியம் செய்தனர். இதில் பொதுமக்கள் 3 பேருக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  பட்டாகத்தியால் வெட்டியவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். சென்னை வேப்பேரி குறவன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். கூலி தொழிலாளி. அதே பகுதியைச்சேர்ந்த இன்னொருவர் கான் இவர்கள் இருவரும் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள மெயின்ரோட்டில் … Read more