பாதுகாப்பு படையினருக்கு வீர தீர விருதுகள்- குடியரசு தலைவர் வழங்கினார்.

டெல்லி: முப்படைகளின் தளபதியான குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று 2-ம் தொகுதி பாதுகாப்பு விருதுகளை வழங்கினார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாட்டிற்காக உயிரை தியாகம் செய்த வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கீர்த்தி சக்ரா மற்றும் சௌரிய சக்ரா விருதுகளை அவர்களது குடும்பத்தினரிடம் வழங்கினார்.  நிகழ்ச்சியில், அளப்பரிய வீரம், அசாத்திய துணிச்சல், மற்றும் கடமையில் அதீத ஈடுபாடு ஆகியவற்றை வெளிப்படுத்தியதற்காக, பாதுகாப்பு படையினருக்கான வீரதீர விருதுகளும்  வழங்கப்பட்டன. சிறப்பான சேவைக்காக 13 பரம் விசிஷ்டா … Read more

சாலை பாதுகாப்பு தொடர்பாக மாவட்ட அளவில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: சாலை பாதுகாப்பு தொடர்பாக மாவட்ட அளவில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்ட குழுவில் 14 பேர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.,

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு ஜூன்-9 வரை அமலாக்கத்துறை காவல்: சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவு

டெல்லி: டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினை ஜூன்- 9 வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்யப்பட்ட டெல்லி சுகாதாரத்துறை அமைச்சரை ஜூன் 9-ந் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்தது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வலது கரமாக செயல்படுவர் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின். கடந்த சில மாதங்களாக சத்யேந்தர் ஜெயின் … Read more

FIR மட்டும் போட்டிருந்தால் பாஸ்போர்ட் வழங்க தடையில்லை – நீதிமன்றம்

முதல் தகவல் அறிக்கை நிலையில் குற்ற வழக்கு நிலுவையில் இருக்கும் நபருக்கு பாஸ்போர்ட் வழங்குவதற்கு எந்த தடையும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருச்சியைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா என்பவர் மலேசியாவில் தொழில் செய்துவருகிறார். தமது பாஸ்போர்ட் தொலைந்துவிட்ட நிலையில் இந்தியா திரும்புவதற்காக தமக்கு புதிய பாஸ்போர்ட் வழங்கக்கோரி மலேசியாவில் இந்திய தூதரகத்தில் விண்ணப்பித்தார். ஆனால் அவர் கடந்த 2017 மற்றும் 2018 ஆண்டுகளில் திருச்சியில் இருந்தபோது சில குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளதாகக்கூறி அவருக்கு … Read more

நடிகை பூனம் பாண்டே மீது குற்றப் பத்திரிகை தாக்கல்| Dinamalar

பனாஜி : ஆபாச ‘வீடியோ’ எடுத்த வழக்கில் நடிகை பூனம் பாண்டே மற்றும் அவரது முன்னாள் கணவர் சாம் பாம்பே ஆகியோர் மீது கோவா போலீசார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.பாலிவுட் நடிகை பூனம் பாண்டே, சாம் பாம்பே என்பவரை காதலித்து 2020ல் திருமணம் செய்து கொண்டார். கொரோனா ஊரடங்கு காலத்தில் தேனிலவு கொண்டாட கோவா சென்றனர். அங்கு, இருவரும் சேர்ந்து சபோலி அணையில் நிர்வாண படம் எடுத்துள்ளனர். இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இதற்கு … Read more

எதிர்ப்புக்கு பணிந்தார்: படத்தின் தலைப்பை மாற்றிய அக்ஷய் குமார்

பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடித்துள்ள படம் பிருத்விராஜ். இதில் அவருடன் சஞ்சய் சத், சோனுசூட், மனுஷி ஷில்லர் உள்பட பலர் நடித்துள்ளனர். சந்திரபிரகாஷ் திவேதி இயக்கி உள்ளார், ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ளார். வருகிற 3ம் தேதி படம் வெளிவருகிறது. இந்த படம் இந்தியாவை ஆக்ரமித்த முகலாய மன்னர்களை எதிர்த்து போராடி இந்துஸ்தானி சாம்ராஜ்யத்தை உருவாக்கிய மன்னர் பிருத்விராஜின் வரலாற்ற கதை. இந்த படத்திற்கு பிருத்விராஜ் என்று மொட்டையாக பெயர் வைக்க கூடாது. சாம்ராட் பிருத்விராஜ் சவுகான் என்று … Read more

இந்திய ரூபாயை விடுங்க.. பாகிஸ்தானின் ரூபாய் நிலை என்ன தெரியுமா?

சமீபத்திய வாரங்களாகவே அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 77 ரூபாய்க்கு மேலாக சரிவிலேயே காணப்படுகிறது. இதே பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பானது இன்னும் மோசமான நிலையில் இருந்து வருகின்றது. பொருளாதார நிபுணர்கள் இதே நிலை தொடர்ந்தால் பாகிஸ்தான் அடுத்த இலங்கையாக மாறலாம் என எச்சரித்து வருகின்றனர். இந்திய விமான பயணிகளுக்கு செம மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் எரிபொருள் விலை கடும் உச்சம் இலங்கையை போலவே பாகிஸ்தானிலும் விலைவாசியானது கடுமையான உச்சத்தினை எட்டி வருகின்றது. … Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களிடம் மீண்டும் விசாரணை

ஈஸ்டர் ஞாயிறு அன்று நடத்தப்பட்ட தொடர் பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஐந்து சந்தேக நபர்களிடமும் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்ற சட்டமா அதிபரின் உத்தரவிற்கு அமைய அந்த சந்தேக நபர்களை மூன்று மாதங்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் டீ. என். எல். மஹவத்தை நேற்று (30) உத்தரவிட்டுள்ளார். இதன்படி, காத்தான்குடியைச் சேர்ந்த ஆதம் லெப்பை அஹமட் அர்ஹம், முஹம்மட் ரபீக் ரிஸ்பான், முஹம்மது மொஹொமிதீன் முஹம்மது றிஸ்வான், … Read more

ரூ.86,912 கோடியை ஜிஎஸ்டி இழப்பீடாக விடுவித்தது மத்திய அரசு; தமிழகத்திற்கு ரூ.9602 கோடி விடுவிப்பு

Central govt releases Rs.86.912 crore to states for GST compensation: மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீட்டு தொகையான ரூ.86,912 கோடியை மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளது. இதில் தமிழகத்திற்கு ரூ.9602 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. “மாநிலங்களின் வளங்களை நிர்வகிப்பதற்கும், அவர்களின் திட்டங்கள் குறிப்பாக மூலதனச் செலவுகள், இந்த நிதியாண்டில் வெற்றிகரமாக நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்று மத்திய அரசு … Read more

ஒருதலை காதலியுடன் பேச தடையாக இருந்த கணவன் கொடூர கொலை.. மதுரையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

ஒருதலை காதலியின் கணவனை கொலை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டம், கீரைத்துறை பகுதியை சேர்ந்தவர்  ராஜேஷ்குமார். இவருக்கு திருமணமாகி சத்யா என்ற மனைவியும் ராகுல் என்ற மகனும் உள்ளனர். சம்பவதன்று, ராஜேஷ் நண்பர் மருது சூர்யா மற்றும் அவரது கூட்டாளிகளுடன் வெளியே சென்றுள்ளார். அப்போது அவர்களுக்கிடயே நடந்த வாக்குவாதத்தால் ராஜேஷை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில், ராஜேஷ் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் … Read more