“காங்கிரஸில் `இந்து' என்ற வார்த்தையையே வெறுப்பவர்கள் இருக்கின்றனர்!" – காங்கிரஸ் தலைவர் அதிருப்தி

நாடாளுமன்ற ராஜ்ய சபாவில் தற்போது காலியாக இருக்கும் 57 உறுப்பினர்களுக்கான தேர்தல், வரும் ஜூன் 10-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்களின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டன. மேலும், தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் முடிவடைந்தது. இதுவொருபுறமிருக்க, காங்கிரஸ் கட்சியிலிருந்து சில தலைவர்கள், காங்கிரஸின் வேட்பாளர் பட்டியலால் சொந்தக் கட்சி மீதே தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்திவருகின்றனர். இந்த நிலையில், காங்கிரஸ் தலைவரான ஆச்சார்யா பிரமோத்தும், காங்கிரஸின் ராஜ்ய சபா வேட்பாளர் பட்டியலில் தன்னுடைய பெயர் … Read more

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கண்ணீர் மல்க கோரிக்கை மனு வழங்கிய கர்ப்பிணி பெண்..!

நாகையில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கர்ப்பிணி மீனவப் பெண் ஒருவர் கண்ணீர் மல்க கோரிக்கை மனுவை வழங்கினார். வேளாங்கண்ணி அடுத்த கருவேலங்கடை கல்லாறு வாய்க்கால் தூர்வாரப்பட்ட பணியை முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு கூடியிருந்த மீனவப் பெண், இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட விசைப்படகுகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதி அளித்தார். முன்னதாக திருவாரூர் மாவட்டம் காட்டூரில் தனது பாட்டி அஞ்சுகம் அம்மாள் நினைவிடத்தில் … Read more

பழங்குடியினருக்காக ஒதுக்கிய ரூ.265 கோடி பயன்படுத்தாமல் அரசிடமே திருப்பி ஒப்படைப்பு: ஆர்டிஐ தகவல்

மதுரை: தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை (Tamilnadu government Tribal Welfare department) மூன்று ஆண்டுகளில் ரூ.265 கோடி நிதியை பயன்படுத்தாமல், அந்த நிதியை திருப்பி ஒப்படைத்துள்ளது. அந்த நிதி தற்போது வனத்துறை, ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட பிற துறைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திரட்டிய தகவல்களைப் பகிர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் எஸ்.கார்த்திக், ”மத்திய அரசு மற்றும் தமிழக அரசு … Read more

மலை உச்சியில் நிறுத்தப்பட்டிருக்கும் விமானம்.. இறக்கையின் விளிம்பில் நின்று கடல் அழகை ரசிக்கும் புகைப்பட கலைஞர்.!

இந்தோனேசியாவில் மலை உச்சியில் நிறுத்தப்பட்டிருக்கும் விமானத்தின் இறக்கை மீது நடந்துச் சென்று, ஒரு நபர் கடலின் அழகை கண்டு ரசிக்கும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அந்நாட்டில் இருக்கும் பாலி தீவு, பசுமையான மலைகளைக் கொண்ட அழகிய சுற்றுலாத் தளமாகும். அங்கு கடலோர மலைக்குன்றின் மீது நிறுத்தப்பட்டுள்ள போயிங் விமானத்தின் இறக்கையில் நடந்துச் சென்ற கோமிங் தர்மவான் என்ற புகைப்பட கலைஞர், இறக்கையின் விளிம்பில் நின்று கடல் அழகை கண்டு ரசித்து, அதனை படமாக்கி உள்ளார். Source … Read more

கணவரின் காதலியை அறையில் அடைத்து கூலிக்கு ஆள் வைத்து அட்டாக்..! பலாத்கார வழக்கில் சிக்கிய மனைவி

கணவரின் காதலியிடம் சமாதானம் பேசுவதாக வீட்டிற்கு அழைத்து கூலிப்படையினரை ஏவி அந்தப் பெண்ணை பலாத்காரம்  செய்து வீடியோ எடுத்து மிரட்டிய மனைவி கூலிப்படையினருடன் கைது செய்யப்பட்டுள்ளார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் கோண்டாப்பூரை சேந்தவர் காயத்திரி. இவரது கணவர் ஸ்ரீகாந்த் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி வருகின்றார். அதே பகுதியில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி வந்த பெண் ஒருவருடன் ஸ்ரீகாந்துக்கு நட்பு ஏற்பட்டு அது நாளடைவில் திருமணம் கடந்த காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி … Read more

உயிரணு தானத்தால் 15 பிள்ளைகளுக்கு தந்தையான பிரித்தானியர்: அவருக்கிருந்த நோயால் அதிர்ந்த தாய்மார்கள்

பிரித்தானியாவில் உயிரணு தானத்தால் 15 பிள்ளைகளுக்கு தந்தையான பிரித்தானியர் ஒருவர் தமக்கிருந்த குணப்படுத்த முடியாத மரபணு நோயை மறைத்ததாக கூறி பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். குறித்த நபருக்கு மரபணு நோயானது குணப்படுத்த முடியாது என்பதுடன், அவரால் பிறக்கும் குழந்தைகள் கற்றல் திறன் பாதிப்பு கொண்டவர்களாக இருப்பார்கள் என கூறப்படுகிறது. டெர்பி பகுதியை சேர்ந்த 37 வயது ஜேம்ஸ் மெக்டோகல் என்பவரே தற்போது நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்கிறார். இவரது சமூக ஊடக விளம்பரத்தை நம்பி தன்பாலின ஈர்ப்பு பெண்கள் … Read more

ஜூன் 2ந்தேதி பாஜகவில் சேருகிறார் ஹர்திக் பட்டேல்…

காந்திநகர்: குஜராத் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஹர்திக்பட்டேல் ஜூன் 2ந்தேதி பாஜகவில் சேர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காந்திநகர் அலுவலகத்தில் ஹர்திக் படேலை பாஜக வரவேற்க தயாராக உள்ளது என அறிவித்து உள்ளது. குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. அன்பயனாக மாநில காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவராக இருந்து வந்த ஹர்திக் படேல், கட்சி தலைமைமீது கொண்ட அதிருப்தியால், மே 12ந்தேதி காங்கிரஸ் … Read more

இந்தியாவுக்கு புதிய கேப்டன் தேவைப்பட்டால் இவர் இருக்கிறார்… மைக்கேல் வாகன் டுவீட்

லண்டன்: நடந்து முடிந்த ஐபிஎல் 15-வது சீசனில், இந்த ஆண்டு புதிதாக சேர்க்கப்பட்ட குஜராத் டைடன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. பலம் வாய்ந்த அணிகளாக கருதப்பட்ட மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் லீக் சுற்றிலேயே மோசமான புள்ளிகள் எடுத்து வெளியேறின. குஜராத் டைடன்ஸ் அணிக்கு தலைமை தாங்கிய ஹர்த்திக் பாண்டியாவின் கேப்டன்ஷிப்பை அனைவரும் புகழ்ந்து வருகின்றனர். கேப்டன்ஷிப்பை தவிர்த்து, ஹர்திக் பாண்டியா இந்த சீசனில் 487 ரன்களையும், 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் இந்தியாவிற்கு … Read more

சாலையோரம் நின்ற பெண்மணி கொடுத்த பரிசு – திடீரென காரை நிறுத்த சொன்ன பிரதமர்

சிம்லா: மத்திய அரசின் 8 ஆண்டு நிறைவை முன்னிட்டு சிம்லாவில் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். முன்னதாக, பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி சிம்லா சென்றார். மாநாட்டிற்குச் செல்லும் வழியில் சாலையின் இருபுறமும் குவிந்திருந்த பா.ஜ.க. தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில், பிரதமர் மோடி தனது காரை திடீரென நிறுத்தச் சொன்னார். சாலையோரம் நின்றிருந்த மக்களில் ஒரு பெண்மணி தனது தாயாரான ஹீரா … Read more

சென்னையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை: சென்னை சேத்துப்பட்டில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நாகமூர்த்திக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலெட்சுமி தீர்ப்பு வழங்கியுள்ளார். கடந்த 2018-ல் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக நாகமூர்த்தி(57) என்பவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.